சென்னை, ஜூலை 11 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மத்தியசென்னை மாவட்டம் சார்பில் 509 சந்தாக்கள் தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் ராமலிங்கத்திடம் வழங்கப் பட்டது. தமிழ்நாடு முழுவதும் தீக்கதிர் நாளிதழ் சந்தா சேர்ப்பு இயக்கம் நடை பெற்று வருகிறது. இதனையொட்டி மத்திய சென்னை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக ஜூலை 5 அன்று மத்தியக்குழு உறுப்பி னர் பி.சம்பத் மாவட்டம் முழுவதும் சென்று சந்தாக்களை சேகரித்தார். இரண்டாம் கட்டமாக ஜூலை 10 அன்று தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் ராமலிங்கம் மாவட்டம் முழுவதும் பகுதி வாரியாக சென்று பகுதிச் செய லாளர்கள், வர்க்க, வெகுஜன அமைப்பு களின் தலைவர்கள், அரங்க செய லாளர்கள், நிர்வாகிகளிடம் இருந்து சந்தாக்களை பெற்றுக் கொண்டார். இதன்படி மாவட்டம் முழுவதும் 393 ஆண்டு சந்தாக்கள், 116 ஆறு மாத சந்தாக்கள் என 509 சந்தாக்களுக்கு 9 லட்சத்து 7 ஆயிரத்து 800 ரூபாய் மதுக்கூர் ராமலிங்கத்திடம் வழங்கப் பட்டது. இந்நிகழ்வுகளில் மதுக்கூர் ராம லிங்கம் பேசியதன் சுருக்கம் வரு மாறு: திருவல்லிக்கேணியில் சிந்தனை சிற்பி சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவித்து தொடங்கிய சந்தா சேகரிப்பு இயக்கம், ஆயிரம் விளக்கு பகுதி பகத்சிங் சிலைக்கு மாலை அணிவித்து நிறைவு செய்துள்ளோம். தேனீக்கள் சென்று பூக்களில் தேன் சேகரிப்பதை போன்று மாவட்டம் முழுவதும் தோழர்கள் சந்தாவை சேகரித்து தேனடையாக தந்துள்ளனர். எனவே, தீர்மானித்துள்ள இலக்கை அடைய முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இன்றைக்கு கர்ணன், மாமன்னன் படங்கள் வந்துள்ளன. காவிரி தொடங்கும் குடகில் பிறந்த தோழர் பி.சீனிவாசராவ், கடைமடை பகுதி யான திருத்துறைப்பூண்டியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். திருத்துறைப்பூண்டியில் பிறவி மருந்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தேரோட்டத்திற்கு கொடி யேற்றிவிட்டால், பட்டியலின தலித்துகள் திருத்துறைப்பூண்டி நகரத்திற்குள் செல்லக் கூடாது. கட்டுப் பாட்டை மீறினால் கட்டி வைத்து விடு வார்கள்.
இந்த நிலையில், தோழர் வேயண்ணா மனைவியை பாம்பு கடித்து விட்டது. திருத்துறைப் பூண்டிக்கு சென்று நாட்டு மருந்து கடையில் மருந்து வாங்கியவரை பிடித்து கட்டி வைத்துவிட்டனர். இதனையறிந்து சென்ற பி.சீனி வாசராவ், காட்டுமிராண்டித் தனமான முறையை ரத்து செய்யும் வரை தேர் ஓடாது என்று போராட்டத்தை தொடங்கி னார். 12 நாட்கள் தேரை ஓட விடாமல் செங்கொடி இயக்கம் நிறுத்தி வைத்தது. அந்த கொடிய உத்தரவு தகர்த்தெறியப்பட்டு, அனைத்து மக்களும் தேரை இழுத்துச் செல்லும் நிலை உருவானது. அத்தகைய போராட்டம் நடத்தித்தான் இயக்கத்தை வளர்த்துள்ளோம். இதுதான் கம்யூனிஸ்ட்டுகளின் வரலாறு. ‘ஜன சக்தி’ ஏட்டை கொண்டு வருவதிலும் அவர் மிகப் பெரும் பங்காற்றினார். சிந்தனை சிற்பி சிங்காரவேலர், 40 வயதுக்கு பிறகுதான் சட்டம் படித்து வழக்கறிஞரானார். மீனவ சமுதா யத்தை சேர்ந்தவர்கள் என்பதால், உயர்நீதிமன்றம் சென்ற அவரை சக வழக்கறிஞர்கள் அவமதித்தனர். அடுத்தநாள், சட்டப் புத்தகங்களை வலைக்குள் போட்டு நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்று அதிர்வை உரு வாக்கிய புரட்சியாளர். உலக புரட்சி யாளர்கள் அனைவருமே படிப்பாளி களாக, சிறந்த வாசிப்பாளர்களாக இருந்துள்ளனர். பகத்சிங் தூக்கு மேடைக்கு செல்லும் முன் லெனின் எழுதிய புத்தகத்தை படித்துக் கொண்டி ருந்தார். அவர் இளைஞர்களின் அடையாளமாக திகழ்கிறார்.
தீக்கதிர் பத்திரிகையை வளர்ப்பது இடதுசாரி அரசியலை விதைப்பது போன்றது. தொழிலாளி வர்க்கத்தின் அரசியலை கொண்டு செல்ல மிகுந்த இடர்பாடுகளுக்கும், இன்னல்களுக் கும் இடையில் நாளிதழை நடத்து கிறோம். திருவல்லிக்கேணியில் கரை யோர குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கட்சி போராடி வருகிறது. அத்தகைய போராட்டங் களுக்கு தீக்கதிர் நம்முடைய ஆயுதம், வாள், கேடயம் என்கிற உணர்வோடு தவம்போல் அரும்பணியாற்றி இலக்கை நோக்கி சென்றுள்ளோம்; சிங்காரவேலரோடும், பகத்சிங்கோடும் தொடர்ந்து முன்னேறுவோம். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்வுகளின் போது தீக்கதிர் சி.கல்யாணசுந்தரம், மாவட்டச் செயலா ளர் ஜி.செல்வா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.முரளி, சி.திரு வேட்டை, எஸ்.கே.முருகேஷ், கே.முரு கன், வே.ஆறுமுகம், வி.தனலட்சுமி, இ.சர்வேசன், எஸ்.சிவசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.