தூத்துக்குடி, ஆக. 5 தூத்துக்குடியில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற பனிமய மாதா பேராலயம், தமிழகத்தில் வேளாங்கண்ணிக்கு அடுத்தபடியாக பிரசித்திபெற்ற கிறிஸ்தவ ஆலயமாக விளங்குகிறது. இங்கு ஆண்டு தோறும் ஜூலை 26 முதல் 10 நாட்கள் திருவிழா நடைபெறு வது வழக்கம். ஆக.5ஆம் தேதி நடைபெறும் பெருவிழா வில் சாதி, மத பாகுபாடு இன்றி லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பனிமயமாதா அன்னையை வழிபடுவார்கள். கடந்த 2 ஆண்டுகளாக திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்நிலையில், பனிமய மாதா ஆலயத்தின் 440வது ஆண்டு திருவிழா கடந்த 26ம் தேதி தொடங்கியது. விழாவி்ன் முக்கிய நிகழ்வான அன்னையின் பெருவிழா வெள்ளியன்று நடைபெற்று வருகிறது. இதையொட்டி வெள்ளியன்று காலை நடைபெற்ற திருப்பலியில் மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன், தூத்துக்குடி மறை மாவட்டத் தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அடுத்த ஆண்டு (2023) தங்கத்தேர் பவனி நடைபெறும் என்ற அறிவிப்பை அவர் வெளியிட்டார். விழாவை முன்னிட்டு இன்றைய தினம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பேராலயம் சுற்றிலும் சுமார் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பனிமய மாதா திருவிழாவில் கடந்த 2013ஆம் ஆண்டு தங்கத் தேர் திருவிழா நடைபெற்றது. இந்நிலை யில் வரும் 2023ஆம் ஆண்டில் தங்கத் தேர் பவனி நடைபெறுகிறது. 16வதுமுறையாக தேர் திரு விழா நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு நடைபெறும் தேர் திருவிழா சிறப்புவாய்ந்தது. சிலுவைக்குப் பதிலாக நட்சத்திரத்தைக் கொண்டி ருக்கும் இத்தேரிலுள்ள தங்கக்கிரீடம், கடவுளின் தந்தை சிலை, புறா வடிவில் தூய ஆத்மா, குழந்தை வடிவில் ஏசுநாதர், தூய அன்னை, மீனவ சமுதாயத்தின ரின் கதை சொல்லும் அடித்தள வடிவமைப்பு என்று பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டது. (ந.நி.)