திருவண்ணாமலை,செப்.30- தோழர் பி.சீனிவாச ராவ் நினைவு நாளில் திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடத்திய பஞ்சமி நில மீட்பு போராட்டத்திற்கு வெற்றி கிடைத்தது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூர் ஊராட்சி கடப்பன்குட்டை கிராமத்தில் பழங்குடி இருளர் இன மக்களின் நிலத்தை, அதே பகுதியைச் சேர்ந்த ஆதிக்க சாதியினர் அபகரித்து வைத்திருந்தனர். இதையடுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் பி. சீனிவாசராவ் நினைவு தினத்தில் பஞ்சமி நிலம் மீட்பு போராட்டம் நடத்தப் பட்டது. அந்த போராட்டத்தின் போது, அப்பகுதிக்கு வந்த கோட்டாட்சியர், வட்டா ட்சியர் மற்றும், காவல்துறையினர் பஞ்சமி நிலத்தை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என உறுதியளித்தனர். ஆனாலும், கடந்த இரண்டு ஆண்டுகாலமாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனையடுத்து, வெள்ளியன்று (செப்.30) திருவண்ணாமலை கோட்டாட்சி யர் அலுவலகம் முன்பு சிபிஎம் மற்றும் தீண்டா மை ஒழிப்பு முன்னணியின் சார்பில் பஞ்சமி நிலத்தை மீட்டு தர கோரி காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செய லாளர் கே .சாமுவேல்ராஜ் தலைமை தாங்கி னார். மாநில துணைப் பொதுச் செயலாளர் பா. செல்வன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம். சிவக்குமார், தலித் விடுதலை இயக்கம், நண்பர்கள் சங்கம், மண்ணுரிமை கூட்ட மைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் வெற்றிவேல் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி னார். அப்போது பழங்குடி இருளர் இனத்தை சேர்ந்த ராமன் பெயரில் நிலம் பட்டா மாற்றம் செய்துள்ளதால் அந்த பஞ்சமி நிலத்தை பயன்படுத்திக்கொள்வதற்கான ஆவணங் களை வழங்கினார். மேலும், பழங்குடியின மக்கள் அனைவருக்கும் நிலம் கிடைப்ப தை உறுதி செய்யப்படும் என்றும் உறுதி யளித்ததைத் தொடர்ந்து போராட்டம் வெற்றி பெற்றது.