புதுதில்லி, டிச.2- நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் புதனன்று எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, முன்களப் பணியாளர்களாக பணி யாற்றிய ஆஷா ஊழியர்களின் சம்பளப் பாக்கி, விவசாயிகள் போராட்டம், அணைகள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை மக்கள வையில் உறுப்பினர்கள் எழுப்பினர். மக்களவையில் வியாழனன்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விவாதத்தின் மீது பேசிய ஹரியானாவைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் ரத்தன்லால் கட்டாரியா, கொரோனா தொற்றுப் பரவலின் போது பாஜக மேற்கொண்ட நிவாரணப்பணிகளை அடுக்கினார். ஒன்றிய அரசின் உட்கட்டமைப்பு வசதி கள் குறித்தும் புகழ்ந்து தள்ளினார். அத்தோடு தங்களது பணியை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோரும் பாராட்டினர் என்றார். கொரோனா பரவல் காலத்தி லும் கூட (கடந்த 10 மாதங்கள்) ஜிஎஸ்டி வசூல் 1 லட்சம் கோடியைத் தாண்டி யுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார். தொற்றுப்பரவலுக்கு இடையி லும் பொருளாதாரம் மேம்பட்டுள்ள தாகவும் கட்டாரியா கூறினார்.
சிவேசேனா புகார்
இவரைத் தொடர்ந்து பேசிய மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி - சிந்து துர்க் மக்களவைத் தொகுதி உறுப்பி னர் வினாயட்க ரவுத் (சிவசேனா) கொரோனா தொற்றால் உயிரிழந்த வர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இழப்பீடு குறித்து கேள்வியெழுப்பி னார். தொடர்ந்து பேசிய ராவத், 1500 ஆக்சிஜன் ஆலைகளில் 363 ஆலைகள் மட்டுமே செயல்படுகின்றன. பிம்கேர்ஸ் நிதியின் கீழ், எங்களுக்கு ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள், வெண்டிலேட்டர்கள் மற்றும் மருந்து கள் தேவைப்பட்டன, ஆனால் அந்த நேரத்தில் பிஎம்கேர்ஸ் திட்டத்தின் கீழ் 60 சதவீத வெண்டிலேட்டர்கள் செயல் படவில்லை. இந்த நிறுவனங்கள் மற்றும் ஏஜென்சிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அதிகாரம் பறிப்பு
இருப்பதாகவும், 293 அணைகள் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை யானவை என்றும் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் நதிமுல் ஹக் பேசினார். அணைகள் பாதுகாப்பு மசோதா, 2019- உருவாக்கப்பட்ட விதம் ஆய்வு செய்ய வேண்டுமென வலி யுறுத்தினார். குறிப்பாக அணை பாது காப்பு மசோதா 2019, ரத்து செய்யப் பட்டுள்ள வேளாண் சட்டங்களில் இடம் பெற்றிருந்தது என்றார். அணை பாதுகாப்பு மசோதா, 2019 ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும், மாநிலங்களின் அதிகாரங்களைப் பறிக்கும் செயல் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் வி.சிவதாசன் குற்றம்சாட்டினார்.
விலை உயர்வு
சமையல் எரிவாயு சிலிண்டர், பெட் ரோலியப் பொருட்கள் ஆகியவற்றின் விலையை உயர்த்தி வரும் ஒன்றிய அரசை விமர்சித்து காங்கிரஸ் உறுப்பினர் கோகோய் கடுமையாக விமர்சித்தார். அவர் பேசுகையில், “ஏழைகளுக்குப் பதிலாக கார்ப்ப ரேட் நிறுவனங்களின் மீதான வரியை அதிகப்படுத்துங்கள், ஏழைகள் குடும் பங்கள் பல சம்பாத்தியங்களை இழந்து ள்ளன. சம்பாதிப்பவர்களையும் இழந்துள்ளனர்” என்றார்.
ஆஷா ஊழியர்கள் வஞ்சிப்பு
கொரோனா தொற்றுப்பரவலுக்கு எதிராக முன்களப் பணியாளர்களாக பணியாற்றிய ஆஷா ஊழியர்களுக்கு இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. கோரிக்கைகளை வலியுறுத்தி உத்தரப்பிரதேசத்தில் ஆஷா ஊழியர்கள் நடத்திய பேர ணியில் அவர்கள் தாக்கப்பட்டதையும் அவையின் கவனத்திற்குக் கொண்டு வந்தார் கோகோய்.
எதேச்சதிகாரத்தை தோற்கடித்த மக்கள் வலிமை
தில்லி விவசாயிகள் போராட்டம் குறித்துப் பேசிய தர்மபுரி திமுக உறுப் பினர் செந்தில்குமார், விவசாயிகள் போராட்டத்தின் போது உயிரிழந்த 700க்கும் மேற்பட்ட விவசாயிகளின் குடு ம்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அர சின் எதேச்சதிகாரத்தை விட மக்களின் எதிர்ப்பு வலிமையானது என்ற பாடத்தை கற்றுக்கொடுத்துள்ளனர்; மக்களின் குரலை நாம் ஏற்றுக் கொள்ளவேண்டும்; இதுதான் இந்திய ஜனநாயகத்தின் அடித்தளம் என்றார்.