சென்னை,டிச.16- கூட்டுறவுத்துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் புதிதாக 70 கூட்டுறவு மருந்தகங் களைத் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழனன்று(டிச.16) நடைபெற்ற நிகழ்வில் கூட்டுறவுத் துறை சார்பில், 36 மாவட்டங் களில் 70 புதிய கூட்டுறவு மருந்தகங்களைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகக் காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார். தமிழ்நாட்டில் கிராமப் பொருளாதார வளர்ச்சியில் கூட்டுறவு இன்றியமையாப் பங்கினை ஆற்றி வருகின்றன. மிகப்பெரிய சமூகப் பொருளாதார இயக்கமான கூட்டு றவு இயக்கம், வறுமையை ஒழிக்கவும், சமூக ஒருமைப்பாட்டை மேம்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றி வருகிறது. அந்த வகையில், கூட்டுறவுத் துறை யின் 2021-22ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை யில், தமிழ்நாட்டில் கூட்டுறவுத் துறை மூலம் 303 மருந்தகங்களில் விற்கப்படும் மருந்து களுக்கு 20 சதவிகிதம் வரை தள்ளுபடி வழங் கப்படுகிறது.
இந்த மருந்தகங்கள் நியாய விலைக் கடைகள் போல வெளிச்சந்தைகளில் மருந்து பொருட்களின் விலையைக் கட்டுக் குள் வைத்திருக்கும் மிகவும் முக்கியமான சமூகப் பங்காற்றுகின்றன. இந்த எண்ணிக்கையை அடுத்த 5 ஆண்டுகளில் ஆண்டொன்றுக்கு 60 கடைகள் வீதம் மொத்தம் 600ஆக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறி விக்கப்பட்டது. அதன்படி, அரியலூர் 2, சென்னை 4, கோவை 2, கடலூர் 2, தருமபுரி 2, திண்டுக்கல் 2, ஈரோடு 2, கன்னியாகுமரி 2, கரூர் 2, கிருஷ்ண கிரி 2, மதுரை 2 நாகை 2, மயிலாடுதுறை 2, நாமக்கல் 2, நீலகிரி 1, பெரம்பலூர் 2, புதுக்கோட்டை 2, ராமநாதபுரம் 2, சேலம் 2, தஞ்சை 2, திருச்சி 2, நெல்லை 2, தென்காசி 2, திருப்பூர் 2, திருவள்ளுர் 2, திருவண்ணா மலை 2, திருவாரூர் 2, தூத்துக்குடி 1, வேலூர் 2, திருப்பத்தூர் 2, ராணிப்பேட்டை 2, விழுப்புரம் 1, கள்ளக்குறிச்சி 1, விருதுநகர் 2, செங்கல்பட்டு 2, காஞ்சிபுரம் 2 என மொத்தம் 70 மருந்தகங்கள் திறக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் இ.பெரியசாமி, பி.மூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி, ஆ.வெங்கடே சன், மு.பூமிநாதன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.