tamilnadu

ஒமிக்ரான்: விமான பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன

சென்னை, டிச. 1 ஒமிக்ரான் தொற்று பரவல் எதிரொ லியாக 12 நாடுகளில் இருந்து இந்தியா வரும் விமான பயணிக ளுக்கு புதன்கிழமை (டிச.1) முதல்  கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள் ்ளது. தமிழ்நாடு பொது சுகாதாரத் ்துறை இயக்குநர் செல்வவிநாயகம் விமான நிலைய இயக்குநருக்கு எழுதியுள்ள கடிதத்தில், தென்  ஆப்பிரிக்கா, பிரேசில், இங்கி லாந்து, பங்களாதேஷ், மொரீஷி யஸ், போஸ்ட்வானா, நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங் ்காங், சீனா, இஸ்ரேல் உள்ளிட்ட 12  நாடுகளில் இருந்து வரக்கூடிய சர்வ தேச விமான பயணிகளுக்கு விமான  நிலைய வளாகத்திலேயே கட்டாயம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

பரிசோதனை முடிவுகள் வரும் ்வரை விமான நிலைய வளாகத்தி லேயே பயணிகளை தங்க வைக்க வேண்டும் எனவும், தொற்று இல்லை என்று உறுதியான பின்னர் அவர்களது வீடுகளில் ஏழு நாட்கள் தனிமைப்படுத்தப்படவேண்டும். 7ஆவது நாள் முடிவில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு அதி லும் தொற்றில்லை என முடிவு வந்த  பின்னரும் மீண்டும் 7 நாட்கள் மருத்து வக் கண்காணிப்பில் இருக்க  வேண்டும் என தெரிவிக்கப்பட் டுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடு வழிகாட்டு  நெறிமுறைகள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வருவதாகவும், ஒன்றிய சுகாதாரத் ்துறை செயலாளர் அறிவுறுத்த லின்படி இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் விமான நிலைய இயக்குநருக்கு எழுதியுள்ள கடிதத்தில் பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியுள்ளார்.

;