பாரதியின் பாட்டை
பாடி திருத்து நாட்டை
சுப்பையாவின் கவிதை
செப்பையா அது விதை
அழுக்கை சுமந்த எழுத்து
கொளுத்தும் கவி நெருப்பு
பழசு தமிழ் உலகம்
பாரதி அதில் திலகம்
அச்சம் கொண்ட மனிதா
அவன் செய்யுலுக்கு
செவி தா
மீன்கள் நிறைய உண்டு
நிலவு என்றும் ஒன்று
எட்டுத்திக்கும் இருட்டு
அவன் எழுத்தைக் கொண்டு விரட்டு
பாட்டன் பல்லவி சரணம்
கேட்டு மாற்றம் வரணும்
- ஜீவி