tamilnadu

img

ஐஎன்எஸ் விக்ராந்த் கட்டுமானத்திற்காக பெருமைப்படலாம்: அமைச்சர் பி. ராஜீவ்

கொச்சி, செப். 7- கேரளாவில் எதுவும் நடக்காது என்று தொடர்ந்து பரப்புரை செய் வோர், நாட்டின் பெருமையான ஐஎன்எஸ் விக்ராந்தை பார்க்க வேண் டும் என்று தொழில்துறை அமைச்சர் பி.ராஜீவ் கூறினார். இந்தியாவிலே யே முதல் விமானம் தாங்கி கப்பலை கேரளா உருவாக்கியது குறித்து ஒவ் வொரு கேரளத்தவரும் பெருமைப் படலாம் என்று பி.ராஜீவ் கூறினார்.இதுகுறித்து அவர் மேலும் கூறிய தாவது:  இந்தியாவின் தொழில்துறை உற்பத்தியில் விக்ராந்த் ஒரு வரலாற்று நிகழ்வு என்று பிரதமர் விவரித்தார். பொதுத்துறை நிறுவனமான கொச்சின் ஷிப்யார்டால் விக்ராந்த் கட்டப்பட்டது. கட்டுமானப் பணி யில் 3000க்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள் நேரடியாக ஈடுபட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான நிரந்தரத் தொழிலாளர்களும், ஆயிரக்கணக் கான ஒப்பந்தத் தொழிலாளர்களும் இதில் உள்ளனர். நிரந்தரத் தொழி லாளர்களுக்கு சிஐடியு, ஐஎன்டி யுசி, பிஎம்எஸ் உள்ளிட்ட தொழிற்சங்கங் கள் உள்ளன. ஒப்பந்தத் தொழிலாளர்கள் சிஐ டியு தொழிற்சங்கத்தைச் சேர்ந்த வர்கள். அனைத்து தொழிற்சங்கங் களின் தலைவர்களும் விருந்தினர் களை வரவேற்க பெருமிதத்துடன் நின்று கொண்டிருந்தனர்.

ஒரு நொடி கூட வேலையை நிறுத்தாமல் இந்த பெருமைமிக்க திட்டத்தை வெற்றி யடையச் செய்வதில் தொழிற்சங்கங் கள் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டன. நிர்வாகமும் பொறுப்பு டன் வழிநடத்தியது. இது தவிர, சுமார் 100 சிறு, குறு  தொழில் அலகுகள் கட்டுமானத்தில் கைகோர்த்தன. இந்த நிறுவனங்களின் மூலம் ஆயிரக்கணக்கான தொழி லாளர்கள் வேலை செய்து வந்தனர். இது நமது பொருளாதார கட்ட மைப்பை நகர்த்தியுள்ளது. சில தனி மைப்படுத்தப்பட்ட தவறான போக்கு கள் கேரளாவில் வேலைவாய்ப்பு சூழ லில் காணப்படுகின்றன. அவர்களை கடுமையாக விமர்சிக்கலாம். நாட்டின் பொதுவான நலனை முன் னெடுப்பதற்கு அவை வலுவாக முன் வைக்கப்பட வேண்டும். இதனை நாடும் அறிய வேண்டும். கேரளா வால் முடியாதது எதுவுமில்லை என்பதை விக்ராந்தின் தயாரிப்பு காட்டுகிறது. இதை ஒரே குரலில், ஒரே மனதாக உலகுக்குச் சொல்வோம். இவ்வாறு பி.ராஜீவ் கூறினார்.

;