வடசென்னை மாவட்டக் குழுவின் சார்பில் மாவட்டம் முழுவதும் சேகரிக்கப்பட்ட தீக்கதிர் சந்தா வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் வடசென்னை மாவட்டம் சார்பில் 438 ஆண்டு சந்தா, 212 ஆறு மாத சந்தா, 16 மூன்று மாத சந்தா, 162 மாத சந்தா என மொத்தம் 820 சந்தாவுக்கான 12 லட்சத்து 89 ஆயிரத்து 500 ரூபாயை மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.கார்த்திஷ் குமார் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் வழங்கினார். மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், மாநிலக்குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.