tamilnadu

img

பத்மஸ்ரீ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள அலங்காநல்லூர் மாணவர் யோகபாலாஜி...

அலங்காநல்லூர்:
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரைச் சேர்ந்த மாணவரை பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு, செய்து மத்திய மனிதவள மேம்பாட்டு துறை பரிந்துரை செய்துள்ளது. .மதுரை அலங்காநல்லூரைச் சேர்ந்த இ.கணேசன் - மீனாட்சி தம்பதி
யர் மகன் யோக பாலாஜி (20). இவர்பத்தாம் வகுப்பு வரை அலங்காநல்லூரை அடுத்துள்ள முடுவார்பட்டி அரசுப்பள்ளியிலும், 11, 12-ஆம் வகுப்புமதுரை செயின்ட் மேரீஸ் பள்ளியிலும்படித்துள்ளார். தற்போது கோயம்புத்தூரில் உள்ள பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் மூன்றாம்ஆண்டு படித்து வருகிறார், இவருக்குஐஸ்வர்யா என்ற சகோதரி உள்ளார்.இவர் அலங்காநல்லூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்துவருகிறார். பாலாஜியின் தந்தைஅலங்காநல்லூரில் உள்ள முத்தூட் நிதி நிறுவனத்தில் காவலாளியாக எட்டாயிரம் ரூபாய் சம்பளத்தில் பணியாற்றிவருகிறார்.

யோகபாலாஜி கொரோனா காலத்தில் கோயம்புத்தூரைச் சுற்றியுள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம், கணிதம் பாடங்களை இலவசமாக கற்றுக்கொடுத்துள்ளார். கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பாடல்களை பாடி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். தவிர காலநிலை மாற்றம் குறித்த ஆய்வை கடந்தஇரண்டரை ஆண்டுகளாக மேற் கொண்டு வருகிறார். வீடு கட்டுவதற்கு பயன்படும் கான்கிரீட்டிற்கு மாற்றாக 34 பொருட்களை கண்டுபிடித்துள்ளார்.இந்த நிலையில் யோக பாலாஜியின் முயற்சியை (“சமாதான் சேலஞ்ச்”)

மத்திய மனிதவளத்துறை அங்கீகரித்துஇவரை பத்மஸ்ரீ விருதுக்கு பரிந்துரைசெய்துள்ளது. பரிந்துரை செய்யப்பட்ட 100 பேரில் இவர் ஒருவர் மட்டுமே கல்லூரி மாணவர்.அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு மட்டும் புகழ்பெற்றதல்ல; பத்மஸ்ரீ விருதுக்கு பரிந்துரைக்கும் அளவிற்குகிராமப்புற மாணவர்கள் உள்ளனர் என்பதை நிரூபித்துள்ளார் யோகபாலாஜி.தமிழக அரசு இவரை நேரில்அழைத்து விருது வழங்கி கௌரவிக்கவேண்டும். பத்மஸ்ரீ விருது இவருக்குக் கிடைப்பதற்கு தமிழக அரசுதம்மால் ஆன முயற்சிகளை மேற் கொள்ள வேண்டும்.

நமது நிருபர்

 

;