பெரம்பலூர், அக்.13- இந்திய குடிமக்களில் தகுதியான அனைத்து வாக்காளர்களையும் வாக்கா ளர் பட்டியலில் இணைத்திட இந்திய தேர்தல் ஆணையம் முழு முயற்சி எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டத்தில் வட்டார மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கான கோலப்போட்டிகள் அக்டோபர் 12 அன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில், இடம் பெற்றிருந்த வண்ணத் தில் தேசிய கொடிக்கு மேலே தாமரை சின்னம் வரைந்துள்ளது போல் காட்சி யளித்துள்ளது. இது தேசிய கொடியை அவமதிப்பது போல் உள்ளது. இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிப்பதோடு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிபிஎம் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ் தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
அம்மனுவில் இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் வாக் காளர்களை இணைத்திட எடுத்திருக்கும் முயற்சியில் இது போன்ற கோலப் போட்டியில் விதிமுறைகள் வகுக்க வில்லையா? அல்லது பாஜக சின்னமா கிய தாமரை சின்னத்தை பொதுமக்களா கிய வாக்காளர்களிடம் கொண்டு செல்ல உடந்தையாக உள்ளதா? எனவும், அதி லும் தேசிய கொடியின் மேல் தாமரை வண்ணம் தீட்டியிருப்பது தேசிய கொடியை அவமதிக்கும் செயல் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.