tamilnadu

img

சமத்துவ விரும்பி!

திருவிக என்றழைக்கப்பட்ட திரு.வி.கல்யாண சுந்தரனார் தமிழ்த் தென்றல் என்று சிறப்பிக் கப்படுகிறார். ஆயினும் அவ ருக்கு வடமொழியும் ஆங்கில மும் நன்கு தெரியும். காந்திஜி யின் உரையை தமிழில் சிறப் பாகச் செய்து அவராலேயே பாராட்டும் பெற்றவர். உபநிஷத் துக்களைக் கற்றார். திருக்குரானைக் கற்றார். பைபிளை யும் கற்றார். சைவ சமயத்தில் பற்றுக் கொண்டார்.  சிங்காரவேலரின் கூட்டத்துக்கு கலகம் செய்யச் சென்று அவரது கொள்கைக்கு ஆதரவாகிப் போனார். அதனால்தான் சென்னையில் தொழிற்சங்கங்களிலும் தொழிலாளர் கூட்டங்களிலும் கலந்து கொண்டு உரிமை முழக்கம் செய்தார். காரல் மார்க்ஸ் என்ற மகா முனிவரின் கொள்கையை இந்தியா தனது வழியில் ஏற்று சமத்துவ வாழ்வு பெற வேண்டும் என்று பேசி னார். எழுதினார்.  இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு ஆசிரி யர்ப் பணியை விடுத்தார். ஆனால் பத்திரிகையாள ராய் பரிணமித்தார். நவசக்தி வார இதழை 20 ஆண்டு காலம் நடத்தினார். தமிழில் சிறப்பாக உரையாற்றும் ஆற்றல் பெற்ற அவர் கவிஞராகவும் திகழ்ந்தார். இராம லிங்க வள்ளலாரின் சமரசக் கொள்கையையும் விரும்பி னார்.  முருகன் அருள் வேட்டல், திருமால் அருள் வேட்டல், பொதுமை வேட்டல், கிறிஸ்துவின் அருள்வேட்டல், புதுமை வேட்டல், சிவனருள் வேட்டல், அருகன் அருகே அல்லது விடுதலை வழி, பொருளும் அருளும் அல்லது மார்க்சியமும் காந்தியமும் என்கிற பாடல்களின் மூலம் அவரது எண்ணங்களைப் புரிந்து கொள்ளலாம். இந்தியாவும் விடுதலையும் என்கிற நூல் அனைவரும் கற்க வேண்டிய ஆவணமாகும். 

செப்.17. திரு.வி.க. நினைவு நாள்!

;