tamilnadu

img

உலக அளவில் செல்லும் தமிழிசை

தஞ்சாவூர், ஜூலை 2-  தமிழிசையை உலக அளவில் பரப்ப, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக தமிழ்ப் பண்பாட்டு மையம் மற்றும் அமெரிக்க உலகத் தமிழிசைப் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.  தமிழக அரசின் நிதி நல்கையில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உரு வாக்கப்பட்டுள்ள தமிழ்ப் பண்பாட்டு மையத்துடன், அமெரிக்க உலகத் தமிழிசைப் பல்கலைக்கழகம் தர வகுப்பு கள் மற்றும் சான்றிதழ், பட்டய வகுப்புகள் நடத்துவதற்குரிய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.  உலக தமிழிசைப் பல்கலைக்கழகம் 2019 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு 2021ஆம் ஆண்டு அமெரிக்க அரசின் அங்கீகாரம் பெற்றது.  இதன் நிர்வாக இயக்குநராக பாபு விநாயகம் செயல்பட்டு வருகிறார். அமெரிக்காவில் உள்ள வெர்ஜீனியா மாகாணத்தில் கணினித்துறை வல்லுந ராகப் பணியாற்றும் பாபு விநாயகம், தமிழிசை மீதுள்ள பற்றால் உலக அளவில் உள்ள தமிழிசை ஆர்வலர்களை ஒருங்கிணைத்து, தமிழிசை வளர்ச்சிக்கு பல அரிய பணிகளை ஆற்றி வருகிறார்.   தமிழ்ப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் பேரா. வி.திருவள்ளுவன், பதி வாளர் (பொ) முனைவர் சி.தியாகராஜன், உலகத் தமிழிசைப் பல்கலைக்கழக செயல் இயக்குநர் முனைவர் மார்கரெட் பாஸ்டின் ஆகியோர் இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொண்டனர்.  தற்போது செய்துள்ள ஒப்பந்தத்தின் மூலம் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் வாயிலாக நடத்தப் பெறும் குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், நாட்டுப் புறக்கலைகள், சிலம்பாட்டம் ஆகிய பாடப்பிரிவுகள், அமெரிக்க உலகத் தமிழிசைப் பல்கலைக்கழகம் வாயிலாக நடத்தப்பட்டு, தமிழ்ப் பல்கலைக்கழகம் வழியாக தேர்வுகள் நடத்தவும், சான்றிதழ் வழங்கவும் வகை செய்யப்படும்.  இந்நிகழ்வில் தமிழ்ப்பண்பாட்டு மைய இயக்குநர் முனைவர் செ.கற்பகம், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் முனை வர் பெ.இளையாபிள்ளை, கண்காணிப் பாளர் பஞ்சநாதன், உதவியாளர் கார்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.