மகாத்மா காந்தியடிகளின் 154வது பிறந்த நாளையொட்டி சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் உள்ள காந்தியடிகள் சிலைக்கு தமிழக ஆளுநர் கே.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஆண்டுதோறும் கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தியடிகள் சிலைக்கு அரசுசார்பில் ஆளுநர், முதல்வர் ஆகியோர் மரியாதை செலுத்துவார்கள். அங்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால் இந்தாண்டு அரசு அருங்காட்சியகத்தில் புதிதாக நிறுவப்பட்ட காந்தியடிகள் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.