திருவனந்தபுரம், டிச.19- சுய கண்காணிப்பில் இருக்கும் அதிக ஆபத்து இல்லாத நாட்டைச் சேர்ந்த வருக்கு ஓமைக்ரான் உறுதி செய்தி ருப்பதால், சுய கண்காணிப்பை எவரும் அலட்சியப்படுத்தக் கூடாது என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார். இதுகுறித்து வியாழனன்று செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: ஒன்றிய அரசின் வழிகாட்டு தல்களின்படி, ஆபத்து நாடுகளில் இருந்து வருபவர்களு க்கு 7 நாட்கள் தனிமைப்படுத்தலும் 7 நாட்கள் சுய கண்கா ணிப்பும் இருக்கும். பிற நாடுகளில் இருந்து வருபவர்களு க்கு 14 நாட்கள் சுய கண்காணிப்பு உள்ளது. இந்த குறிப்பிட்ட சூழ்நிலையில், இந்த இரு பிரிவினரும் சுகாதாரத் துறை யின் வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். ஓமைக்ரான் வைரஸ் மிகவும் வேகமாக பரவும் தொற்று நோயாக இருப்பதால் அதிக ஆபத்து இல்லாத நாடுகளைச் சேர்ந்தவர்களும், கவனமாக இருக்க வேண்டும். சுய கண் காணிப்பு விதிகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.
சுய கண்காணிப்பு என்றால் என்ன? என் என்95 முக கவசமோ இரட்டை முக கவசமோ வீட்டி லும் வெளியிலும் பயன்படுத்த வேண்டும். தனிமைப் படுத்தலில் உள்ளவர் இந்த நாட்களில் வீட்டில் உள்ள வயதானவர்கள் அல்லது நோய்த்தொற்று உள்ளவர்கள் அல்லது குழந்தைகளுடன் நெருங்கிய தொடர்பில் இருக் கக்கூடாது. சமூக தொடர்புகள், நெரிசலான இடங்கள், திரை யரங்குகள் மற்றும் மால்கள் ஆகியவற்றைத் தவிர்க்கவும். நெரிசலான பொது நிகழ்வுகள், விழாக்கள் மற்றும் பொது போக்குவரத்தை தவிர்க்க வேண்டும்.
எல்லா இடங்களிலும் சமூக இடைவெளியை கடைப் பிடிக்க வேண்டும். கைகளை அவ்வப்போது சோப்பு மற்றும் சானிடைசர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். கை குலுக்குவதை தவிர்க்கவும். அறிகுறிகள் உள்ளனவா என்பது குறித்து தாமாகவே கண்காணிக்க வேண்டும். ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக தனிமைப்படுத் திக் கொண்டு சுகாதார ஊழியர்களுக்கு தெரிவிக்க வேண் டும். சந்தேகங்களுக்கு திசா 104, 1056, 0471 2552056 மற்றும் 2551056 என்கிற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அமைச்சர் கூறினார்.