tamilnadu

img

துபாயில் வளைகுடா தகவல் தொழில்நுட்ப கண்காட்சி

நாகர்கோவில், அக்.10-    தமிழக தகவல் தொழில்நுட்ப வியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்க ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:  தமிழக முதல்வரின் அறிவுறுத்த லின்படி துபாயில் அக்டோபர் 10 திங்கள் முதல் தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறவுள்ள வளைகுடா தகவல் தொழில்நுட்ப கண்காட்சியில் தமிழ்நாட்டின் சார்பில் கலந்து கொள்ள உள்ளேன். வளைகுடா தகவல் தொழில்நுட்ப கண்காட்சி, (GITEX - Gulf Information Technology Exhibition) உலக ளவில் நடக்கும் மிகப்பெரிய மற்றும் பிரம்மாண்டமான வருடாந்திர நிகழ்வாகும். சுமார் 170 நாடுகளில் இருந்து அரசு சார்ந்த தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் தனியார் துறையின் பிரதிநிதிகள், கொள்கை வகுப்பா ளர்கள், தொழில் முன்னோடிகள் போன்ற பலர் கலந்து கொள்ளவுள்ளார்கள். இந்த கண்காட்சி, துபாய் உலக வர்த்தக மையத்தில் 10.10.2022 முதல் 14.10.2022 வரை நடைபெறுகிறது. மேலும், உலகம் முழுவதும் இருக்கும் புதுமையான கண்டுபிடிப்புகள், யோசனைகள் மற்றும் முயற்சிகள் மூலம் வணிகம் மற்றும் பொருளாதாரத்தை முன்னேற்று வதற்கான வழி வகுக்கும் சூழல்களை ஒருங்கிணைக்கும் தளமாக இந்த கண்காட்சி அமையும். தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதை சார்ந்த சேவை (IT/ITeS) துறையில் முதலீடுகளை ஈர்ப்பதற்கும், பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் அவர்களின் சேவைகள் மற்றும் அலுவலகங்களை துவங்குவதற்கும் இந்த உச்சி மாநாடு வழி வகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

;