சிவகங்கை, ஜூலை 5- சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் தேர்வுநிலை பேரூராட்சி பகுதியில், ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை துவக்கி வைத்தும் ரூ.16.52 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டியும், 211 பயனாளிகளுக்கு 1 கோடியே 52ஆயிரம் மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர்.பெரியகருப்பன் வழங்கினார். ஜூலை 5 அன்று நடைபெற்ற விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் தலைமை வகித்தார். மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார்,திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு,ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா ஒன்று அமைக்கப்பட்டது. மேலும், இப்பேரூராட்சிக்குட்பட்ட அனைத்துப் பகுதி மக்களுக்கும் தற்போது போது மான அளவில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
கூடுதலாக குடிநீர் தேவையை நிவர்த்தி செய்தி டும் பொருட்டு, அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் குடிநீர் மேம்பாட்டு பணிகளுக்கென ரூ.16.52 கோடி மதிப்பீட்டில் அரசின் சார்பில் ஒப்புதல் பெறப்பட்டு, அதற்கான பணிகள் இன்றைய தினம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிகளின் வாயிலாக சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் 15 மகளிர் சுய உதவிக் குழுக்களை சார்ந்த 183 உறுப்பினர்களுக்கு ரூ.81,10,000- மதிப்பீட்டி லான பல்வேறு வகையான கடனுதவிகளும், 1 பயனாளிக்கு ரூ.25,000- மதிப்பீட்டில் கைம்பெண் கடனுதவியும், 1 பயனாளிக்கு ரூ.50,000- மதிப்பீட்டில் மகளிர் தொழில் முனைவோருக்கான கடனுதவியும், 2 பயனாளி களுக்கு மொத்தம் ரூ.1 லட்சம மதிப்பீட்டி லான சிறுவணிகக்கடனுதவியும், 13 பயனாளி களுக்கு ரூ.11,50,722/- மதிப்பீட்டிலான பயிர்கட னுதவியும், 11 பயனாளிகளுக்கு 6,16,000- மதிப்பீட்டிலான பால்மாடு பராமரிப்புக்கடனுதவி யும் என ஆக மொத்தம் 211 பயனாளிகளுக்கு ரூ.1,00,51,722- மதிப்பீட்டிலான பல்வேறு கடனு தவிகள் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சிகளில், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், திருப்பு வனம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சின்னையா, மானாமதுரை நகர் மன்றத்தலைவர் மாரியப்பன் கென்னடி, பேரூராட்சி துணை தலைவர் ரகமத்துல்லாகான், பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயராஜ் மற்றும் 1-வது வார்டு உறுப்பினர் செல்விரவி பலர் கலந்து கொண்டனர்.