tamilnadu

இணையத்தில் ஆபாச படங்கள் வெளியீடு

சென்னை,டிச.21- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநிலப் பொதுச்செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: இணையதளத்தில் குழந்தைகளின் ஆபாச படங்களை வெளியிட்ட விவகா ரத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட 14 மாநிலங் களில் சிபிஐ, 77 இடங்களில் நடத்திய சோதனையில்  இக்குற்றத்தில் 83 பேர் ஈடுபட்டி ருப்பதாகவும் அவர்கள் மீது  தனித்தனியாக 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வும் செய்திகள் வெளியாகி உள்ளன. இது வரை   10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு ,பஞ்சாப், உத்தரப்பிரதேசம், பீகார், ஒடிசா, மகாராஷ்டிரா, குஜராத், ஹரி யானா, மத்தியப்பிரதேசம், இமாச்சலப்பிர தேசம் ஆகிய மாநிலங்களில் இந்த அதிரடி சோதனை நடந்துள்ளது. தமிழகத்தில் திண்டுக்கல், திருப்பூர், சேலம், திருவண்ணாமலை, நாமக்கல், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. எதையும் விற்பனை செய்யலாம்,

அனைத்தும்  வணிக  நோக்கில் தான் என்ற இந்த நிலைமை குழந்தைகள் மீதும், சமூக உள வியல் மீதும் மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.  வன்முறையையும், சித்ரவதையையும் பொழுதுபோக்காக அனுபவிப்பது வக்கி ரத்தின் வெளிப்பாடு. இது மனிதத்தை மங்கிப் போக வைக்கும். பாலியல் வன்முறையை ஊக்குவிக்கும். இத்தகைய சமூக விரோத செயல்களை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. அகப்பட்டவர்கள் அம்புகள் தான். எய்தவர் களையும் கைது செய்து, குற்ற சதிவலையை வேரோடு வெட்டி வீழ்த்த வேண்டும் என  ஒன்றிய, மாநில அரசுகளையும், சிபிஐயையும் ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்துகிறது. தமிழகத்தில் இந்த வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள்,  குழந்தைகள் தாங்கள் சந்தித்த பிரச்சனைகளை வெளி யில் சொல்வதற்கு தயங்க வேண்டாம். தைரிய மாக முன்வந்து பிரச்சனைகளை முன்வைத்தால் தான், தண்டனை நிச்சயம்  கிடைக்கும் என்ற அச்சம் குற்றவாளிகளுக்கு இருக்கும். இது போன்ற சமூக விரோதி களால் பாதிக்கப்பட்டவர்கள் எப்போது வேண்டுமானாலும் ஜனநாயக மாதர் சங்கத்தை அணுகலாம். ஜனநாயக மாதர் சங்கம் உங்களோடு துணை நிற்கும், பாதுகாக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

;