tamilnadu

img

பழங்குடியினர் மாணவருக்கான இனச்சான்றிதழை விரைந்து வழங்கிடுக!

சென்னை,ஜூன் 1- பழங்குடியினர் மாணவர்களுக் கான இனச்சான்றிதழை விரைந்து வழங்கிடக் கோரி ஜுலை 2 அன்று அனைத்து கோட்டாட்சியர் அலுவல கங்கள் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் பி.டில்லிபாபு தலைமையில் மே 31 அன்று சேலத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநி லத் தலைவர் பெ.சண்முகம், மாநிலப் பொதுச்செயலாளர் இரா.சரவணன், மாநில பொருளாளர் ஏ.பொன்னுசாமி உட்பட மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.  தமிழ்நாட்டில் அனைத்து பள்ளி, கல்லூரிகள் விரைவில் திறக்கப்பட உள்ள சூழலில், இனச்சான்றிதழ் இல் லாத காரணத்தால் பல்லாயிரக்கணக் கான பழங்குடியின மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளில் சேர முடியாமல் மிகவும் பரிதவிக்கின்ற அவல நிலை மை தொடர்கின்றது. இனச்சான்றிதழ் வழங்கிட தமிழ்நாடு அரசு, உயர் அதிகாரிகள், விரைந்து வழங்கிட உத்தரவிட்டாலும் அது நடைமுறை யில் இல்லை.  எஸ்.டி இனச்சான்றிதழுக்காக, இணைய தளத்தில் பதிவு செய்திட்டால் பொருத்தமான காரணங்கள் இல்லா மல், நிராகரிக்கப்படுவதும், தள்ளுபடி செய்வதும் தொடர்கிறது. எனவே, தமிழ்நாடு அரசு, மேல்கல்வி பயிலச் செல்லும் அனைத்து பழங்குடியின மாணவர்களுக்கும் விரைந்து இனச் சான்றிதழ் வழங்கிட வேண்டும். ஏற்கனவே, வருவாய்த்துறையினரால் வழங்கப்பட்டுள்ள பழங்குடியின ருக்கான இனச்சான்றிதழ், தற்போது  அரசின் பதிவுகளில் ஏற்றுக்கொள்ள மறுப்பதாகவும், ஆன்லைனிலே மட்டும் தான் விண்ணப்பிக்க வேண்டுமென்று அரசின் அறிவிக்கப்படாத அறிவிப் பினை பரிசீலனை செய்து அரசின் அனைத்து துறைகளிலும், அட்டையாக வழங்கியுள்ளதை அரசே ஆன்லை னில் மாற்றி இனச்சான்றிதழ் வழங்கிட வேண்டும்.  அதுவரை ஏற்கனவே கோட்டாட்சி யரால் வழங்கப்பட்ட சாதிச்சான்றிதழ், கல்வி, வேலைவாய்ப்பு அரசின் நலத்திட்ட உதவிகள் பெற ஏற்கும் வகை யில் அரசு உத்தரவிட வேண்டும்.  வனஉரிமைச்சட்டம் 2006-ஐ தமிழ் நாட்டில் குறிப்பாக, சேலம் கல்வரா யன் மலை, கள்ளக்குறிச்சி, கல்வராயன் மலை, சித்தேரி மலை, திருப்பத்தூர் ஜவ்வாதுமலை, கொல்லிமலை போன்ற மலைகளில் வாழும் ஆதிவாசி மக்களின் பூர்வீக வனநிலங்களுக்கு வனஉரிமைச் சட்டம் 2006 இன்படி விரைந்து, விண்ணப்பித்துள்ள அனை த்து பழங்குடி மக்களுக்கும் வன உரிமை பட்டா வழங்கிட வேண்டும்.  அதேப்போல், வீட்டுமனை இல்லாத பழங்குடி மக்களுக்கு அரசின் புறம்போக்கு நிலங்களில் வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். பட்டா பெற்றுள்ள வீடற்ற பழங்குடி மக்கள் அனைவருக்கும் ரூ.5 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பீட்டில் வீடுகளை கட்டித் தர வேண்டும். ஜூலை 2 ஆம் தேதி யன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை முன்வைத்து போராடுவது என தீர்மானிக்கப்பட்டது.

பழங்குடியினர் பட்டியலில் இணைத்திடுக

தமிழ்நாட்டின் பூர்வீக குடிகளான மலைபுலையன், குறுமன்ஸ் இனத்தின் உட்பிரிவினர், ஈரோடு மாவட்ட மலை யாளி, குறவன் இனத்தின் உட்பிரிவி னர் மற்றும் வேட்டைக்காரன் ஆகிய பழங்குடி மக்களை தமிழ்நாடு அரசு பழங்குடியினர் பட்டியலில் இணைத்திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். தருமபுரி - சிட்லிங், கொல்லிமலை, வாழவந்தி நாடு, திருப்புலிநாடு, வளர்ப்பு நாடு, தேவனூர் நாடு, செங்கா, தேனூர்நாடு போன்ற ஊராட்சிகளில் பழங்குடியினர் (டி-கார்டு)  அவர்களுக்காகவே அரசு வழங் கிய நிலத்தினை, மோசடியாக, பழங்கு டியினர் அல்லாதவர்கள் பெயரில் நில பதிவு செய்துள்ளதை ரத்து செய்து  நிலத்திற்கு உரிமையான பழங்குடியின மக்களிடமே ஒப்படைத்திட வேண்டும். இருளர் இன மக்களுக்கே நிலப்பட்டா வழங்கிடுக செங்கற்பட்டு மாவட்டம் மதுராந்த கம் வட்டம் 149 பூதூர் கிராமம் பழங்குடி இருளர் இன மக்கள் பல தலைமுறைகளாக பயிர் செய்து வரும் நிலங்களுக்கு பழங்குடியினர் மாநில ஆணையம் வழங்கிய உத்தரவினை (உத்தரவு எண்:251/2022 நாள் 18.7.2023) அமல்படுத்தி, இருளர் இன மக்களுக்கே நிலப்பட்டா வழங்கிட வேண்டும்.  மேற்கண்ட தீர்மானங்களை தமிழ் நாடு அரசு விரைந்து தலையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டுள்ளது.

;