கிருஷ்ணகிரி,ஜூலை 4- அகில இந்திய மாங்கனி கண்காட்சி கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளை யாட்டு மைதானத்தில் ஜூலை 5 ஆம் தேதி துவங்குகிறது. 29 ஆவது அகில இந்திய மாங்கனி கண்காட்சியின் தொடக்க விழாவில் தமிழ்நாடு அமைச்சர்கள், மக்களவை, மாநிலங்களவை, சட்டப் பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். அரசுத் துறை அரங்குகள், தனியார் அங்காடிகள், கலையரங் கம், மா கண்காட்சி அரங்கு, கேளிக்கை அரங்குகள், தின்பண்ட அங்காடிகள், செய்தி மக்கள் தொடர்புத் துறை உள்ளிட்ட பல் வேறு அரசுத் துறைகளின் அரசு சாதனை விளக்க அரங்குகள் இடம் பெறுகிறது. முன்னதாக, விழா முன்னேற் பாடு பணிகள், அரங்குகள் அமைக் கும் பணிகள், பாதுகாப்பு அம்சங் கள், குடிநீர், மின்சாரம், வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் குறித்து ஆட்சியர் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர், “மாங்கனி கண்காட்சிக்கு வரும் அனை வருக்கும் பாதுகாப்பு அளிக்க கூடு தலாக கண்காணிப்பு கேமரா, ட்ரோன் கேமரா பொருத்தப் பட்டுள்ளது. அசம்பாவிதம் செய்யும் நபர்கள் மீது காவல் துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். மாவட்ட காவல் கண்காணிப் பாளர் சரோஜ் குமார், கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் பாபு, வேளாண்மைத் துறை இணை இயக்குநர் டேவிட் டென்னிசன், கிருஷ்ணகிரி துணை காவல் கண்காணிப்பாளர் தமிழரசி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சீனிவாசன், நகராட்சி ஆணையர் வசந்தி, வட்டாட்சியர் சம்பத் மற்றும் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.