tamilnadu

மதுரை மண்டலச் செய்திகள்

திருவில்லிபுத்தூர் பகுதியில் பத்து வீடுகள் சேதம்

திருவில்லிபுத்தூர்:
வடகிழக்குப் பருவ மழை மற்றும் நிவர்மற்றும் புரெவி  புயல்களால் திருவில்லிபுத்தூர் பகுதியில் பத்து வீடுகள் இடிந் துள்ளன.திருவில்லிபுத்தூர் நகரில் புதனன்றுமழை பெய்தது, இதில் திருவில்லிபுத்தூர்மேட்டுத் தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் வீட்டின் இரண்டுசுவர்கள் இடிந்து விழுந்தது  வெள்ளாகுளம் கிராமத்தில் பழனி பாலன் (49) என்பவருடைய மண் வீட்டின் ஒரு பக்கச் சுவர்இடிந்து விழுந்தது. மாநகசேரி கம்மாபட்டிபகுதியில் வசித்து வரும் முத்தையா (60) என்பவரின் ஓட்டு வீட்டின் ஒருபக்க சுவர்இடிந்து விழுந்தது. கடந்த சில வாரங்களில் தொடர் மழைகாரணமாக திருவில்லிபுத்தூர் தாலுகாவில் சுமார் பத்து வீடுகள் இடிந்து விழுந்துள்ளதாகவும் இதில் யாருக்கும் காயமும்ஏற்படவில்லை வீடு இடிந்து விழுந்தவர் கள் நிவாரணம் கேட்டு மனு கொடுத்துள்ளதாக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

                                  ***********************

தொழில் நுட்பப் பயிற்சி வகுப்பு

விருதுநகர்:
விருதுநகர் வி.வி.வன்னியபெருமாள் மகளிர் கல்லூரியில்  டி.பி.டி திட்டத்தின்கீழ் தாவரவியல் துறை சார்பில் தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது. உதவிப் பேராசிரியர் ஆர்.முருகலட்சுமிகுமாரி ஆய்வகத்தில் பயன்படுத்தும் கருவிகளைப் பற்றி விளக்கினார். நாம் அன்றாடவாழ்வில் கண்ணாடிப் பொருட்களின் பயன்பாடு என்ற தலைப்பில் ஸ்ரீபா சிறப்புரையாற்றினார்.  விலங்கியல், மனையியல், வேதியல், இயற்பியல், உயிர்வேதியல் துறையின் ஆய்வக உதவியாளர்கள் பங்கேற்றனர்.

                                  ***********************

கருணை அடிப்படையில் அங்கன்வாடி பணி ஆணை 

விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் திருவில்லி புத்தூர் பகுதியைச் சேர்ந்த  பெண் ணுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை  மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் வழங்கினார்.திருவில்லிபுத்தூர் அருகே உள்ள  கோட்டைப்பட்டியைச் சேர்ந்தவர் முத்தீஸ்வரன் (21). இவர்  கடந்த நவ.19-ஆம் தேதி நண்பர்களுடன்  பேயனாறு ஓடையில் குளிக்கச் சென்ற போது, காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி பலியாகினார். இவருக்கு  வி.சிவரஞ்சனி என்ற மனைவியும்  சமிர்தா ஸ்ரீ என்ற ஒரு வயதுபெண் குழந்தையும் உள்ளது.கணவனை இழந்து வாழும்  சிவரஞ்சனியின் தாயாரும் மனநலம் பாதிக் கப்பட்டவர்.  எனவே அவரது குடும்பச் சூழ்நிலையை கருத்தில் கொண்டு,  அங் கன்வாடி உதவியாளர் பணிக்கான   ஆணையை மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் வழங்கினார்.இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.மங்கள ராமசுப்பிரமணியன், சார் ஆட்சியர் (சிவகாசி) ச.தினேஷ் குமார், திட்ட அலுவலர்  இராஜம், துணைஆட்சியர் (பயிற்சி)  ஷாலினி ஆகியோர் கலந்துகொண்டனர்.

                                  ***********************

‘பேரிகார்டுகளால்  அதிக விபத்து’

மதுரை:
மதுரையைச் சேர்ந்த சரவணன் சென்னைஉயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநலவழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில்,”சாலைகளில் வைக்கப்பட்டுள்ள பேரிகார்டுகளே, தற்போது பல விபத்துகளுக்கு காரணமாக அமைகின்றன.   2019-ஆம் ஆண்டு 57,228 சாலை விபத்துகள் நிகழ்ந்த  நிலையில் 67 ஆயிரத்து 132 பேர் காயமடைந்துள்ளனர். 10 ஆயிரத்து 525 பேர் உயிரிழந்துள்ளனர்.  தொழிலகங்கள், நிறுவனங்கள் போன்றவை தங்கள் நிறுவனத்துக்கு முன்பாக உள்ள  பொது சாலைகளில் விளம்பரம் செய்யும் வகையில் பேரிகார்டுகளை வைக்கின்றன. பேரிகார்டுகளில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் முறையாக ஒட்டப்படாததால் இரவு நேரங்களில் விபத்துகள் அதிகரிக்கின்றன. இதுகுறித்து  அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.எனவே தமிழகத்தின் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளிலும், பொது இடங்களிலும் விபத்தை ஏற்படுத் தும் வகையில் கால்நடைகள் சுற்றித்திரிவதைத் தடுக்கவும், நெடுஞ்சாலைகள் மற்றும் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேரிகார்டுகளை அகற்றவும் எந்தெந்த இடங்களில் பேரிகார்டுகளை வைக்கலாம் என்பது குறித்து முறையான வழிகாட்டுதல்களை பிறப்பிக்கவும் உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.இந்த வழக்கை வியாழனன்று   விசாரித்த நீதிபதி கிருபாகரன், புகழேந்தி அமர்வு, தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் எவ்வளவு வேகத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளன? சாலைகளில் உள்ள பேரிகார்டு அமைப்பதில்தனியார் விளம்பரங்கள் ஏன் வைக்கப்படுகின்றன?என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, அதிவேகமாக சென்றதாக எவ்வளவு வழக்குகள் பதியப்பட்டுள்ளன? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள் தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் பயணிக்க வேகம் நிர்ணயம் செய்வது தொடர் பாகவும் பேரிகார்டுகளில் உள்ள விளம்பரங்களை அகற்றுவது குறித்தும் மத்திய, மாநில அரசுகள் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்குவிசாரணையை 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.