tamilnadu

மதுரை, திருவில்லிபுத்தூர், தூத்துக்குடி முக்கிய செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோவில் ராஜகோபுரம் வாசலை திறக்கக் கோரும் வழக்கு முடித்துவைப்பு
மதுரை, ஜன. 28- தை பூசத் திருவிழாவின் போது பக்தர்களின் நலன்  கருதி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிகோவில் ராஜகோபுரம் (பிரதான நுழைவு வாயில்) திறக்கக்  கோரிய வழக்கில், நான்கு மாதத்தில் மனுதாரரின்  மனுவை பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க இந்து சமய அற நிலையத்துறை ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்ற மது ரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூரைச் சேர்ந்த நாராயணன் சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில்,” திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவிலில் வரு டந்தோறும் சூரசம்ஹாரம் விழா நடைபெறும். பிப்ர வரி 8- ஆம் தேதி “தைப்பூசம்” நடைபெறவிருக்கிறது.  தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்க ணக்காண பக்தர்கள் வந்து செல் வர். திருச்செந்தூரில் முருகன் சன்னதியின் மேற்குத் திசையில் அமைந்துள்ள  ராஜகோபுரம் வழியாக சாமி தரிசனம் செய்ய அனு மதிக்க வேண்டும். இந்த கோபுரவாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கி றது. சாமி தரிசனம் செய்ய ராஜகோபுரத்தை (பிரதான  நுழைவு வாயில்) திறக்க வேண்டி உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்தும் பதிலில்லை. பக்தர்களின் நலன் கருதி, பிப்ரவரி 8- ஆம் தேதி நடக்க விருக்கும்தை பூசத் திருவிழாவிற்கு திருச் செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ராஜகோபுரம் (பிரதான நுழைவு வாயில்) திறக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார். இந்த மனுவை திங்களன்று விசாரித்த நீதிபதிகள் துரை சுவாமி, ரவீந்திரன் அமர்வு, நான்கு மாதத்தில்  மனுதாரரின் மனுவை பரிசீலித்து உரிய உத்த ரவு பிறப்பிக்க இந்து சமய அறநிலையத்துறை ஆணை யருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

குற்றம்சாட்டப்பட்டவர் நீதிமன்றத்திலிருந்து தப்பி ஓட்டம்
திருவில்லிபுத்தூர், ஜன. 28- இராஜபாளையத்தை சேர்ந்தவர் வெனிஸ் குமார் (27) இவர் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு திருவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் நடை பெற்று வந்தது. வழக்கு விசாரணைக்கு வெனிஸ்குமார் ஆஜராகாமல்  இருந்துள்ளார். இதையடுத்து அவரைப் பிடிக்க நீதி மன்றம் வாரண்ட் பிறப்பித்தது. இதையடுத்து அவரை  இராஜபாளயைம் அனைத்து மகளிர் காவல்துறை யினர் கைதுசெய்து திருவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். இயற்கை உபாதை கழிக்கப் போவதாகக் கூறிய வெனிஸ் குமார் நீதிமன்றத்திலிருந்து வெளியே தப்பி யோடினார். அவரை காவலர்கள் பிடிக்க முயன்றனர். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. தகவலறிந்து காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ராஜேந்திரன், காவல் ஆய்வாளர் ஆகியோர் வெனிஸ் குமாரை தேடி வருகின்றனர்.

சிறுவன் கொலையில் கைது  குண்டர் சட்டத்தில் வழக்கு
தூத்துக்குடி, ஜன.28- தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உள்ள வடக்கு முத்துலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர் -  ரேவதி தம்பதியின் மகன் நகுலன்(6) கடந்த டிசம்பர் 31 அன்று  திடீரென காணாமல் போனார். இதுதொடர்பாக நகுலனின் பெற்றோர் எட்டயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த அருள்ராஜ் என்பவர் நகுலனை கடத்தி கொலை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அருள்ராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது 2015ஆம் ஆண்டு மூதாட்டியை கொலை செய்த வழக்கு, 2019-ல் எட்டயபுரம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், மாசார்பட்டி காவல் நிலைத்தில் ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அருண் பாலகோபாலன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவின்பேரில் அருள்ராஜ் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

;