சென்னை,செப்.22- சென்னை உயர் நீதி மன்றத்தின் பொறுப்பு தலை மை நீதிபதியாக நீதிபதி டி.ராஜா வியாழனன்று (செப்.22) பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை உயர் நீதி மன்ற பொறுப்பு நீதிபதியாக இருந்த எம்.துரைசாமி செப்.21 ஆம் தேதியோடு பணி ஓய்வு பெற்றார். இதை யடுத்து உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி டி.ராஜாவை பொறுப்பு தலைமை நீதிபதி யாக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டிருந் தார். அதன்படி, சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி டி.ராஜா பொறுப்பு தலைமை நீதிபதியாக வியாழனன்று (செப்.22) பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் அடுத்த ஆண்டு மே மாதம் 24 ஆம் தேதி பணி ஓய்வுபெறுகிறார். சென்னை உயர் நீதி மன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த எம்.துரைசாமி, பணி ஓய்வு பெற்றதையடுத்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண் ணிக்கை 54 ஆக குறைந்துள் ளது. 75 நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்றத்தில் 21 நீதிபதிகள் பணியிடம் காலியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.