tamilnadu

img

சிபிஎம் பெரம்பலூர் மாவட்ட செயலாளராக பி.ரமேஷ், அரியலூர் மாவட்ட செயலாளராக எம்.இளங்கோவன் தேர்வு

பெரம்பலூர் ,டிச. 17-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் அரிய லூர் மாவட்ட 8 ஆவது மாநாடு டிசம்பர் 16, 17 ஆகிய இரண்டு நாட்கள் ஜெயங்கொண்டத்தில் நடைபெற்றது.  மாநாட்டிற்கு என்.செல்லத் துரை, துரை அருணன்,  அம்பிகாஆகியோர் தலைமை வகித்தனர். மாநாட்டை கட்சி யின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ் ணன் துவக்கி வைத்து உரை யாற்றினார்.    மாநிலக்குழு உறுப் பினர் எம்.சின்னத்துரை எம்எல்ஏ நிறைவுரையாற்றினார் . வரவேற்புக்குழு உறுப்பினர் கோவிந்தராஜ் நன்றி கூறினார். மாநாட்டில் ஒருங்கிணைந்த பெரம்பலூர் அரியலூர் மாவட் டக்குழு இரண்டாக பிரிக்கப் பட்டது.  இதில் கட்சியின் பெரம்ப லூர் மாவட்டச் செயலாளராக பி.ரமேஷ் தேர்வு செய்யப்பட்டார். பெரம்பலூர் மாவட்ட செயற் குழு உறுப்பினர்களாக என். செல்லத்துரை, எஸ்.அகஸ்டின், எ.கலையரசி, எஸ்.பி.டி.ராஜாங் கம், ஆர்.கோகுலகிருஷ்ணன், எ.ரெங்கநாதன், உள்ளிட்ட 21 நபர்கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது.  அரியலூர் மாவட்டச் செயா ளராக எம்.இளங்கோவன்  தேர்வு செய்யப்பட்டார். அரியலூர் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்களாக ஆர்.மணிவேல், கே. மகாராஜன், எம்.வெங்கடாச லம், எ.கந்தசாமி, துரைஅரு ணன், கே.கிருஷ்ணன், வி.பரம சிவம், டி.அம்பிகா உள்பட 31 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது.

;