யாங்கூன், டிச.22- வடக்கு மியான்மரில் கச்சின் மாநிலம் பகந்த் பகுதியில் உள்ள பச்சை மாணிக்கக் கற்களை வெட்டி யெடுக்கும் சுரங்கத்தில் புதன்கிழமை ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 80 பேரை காண வில்லை என்று மீட்புக் குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக (செவ்வாய்) உள்ளூர் நேரப்படி சுமார் நான்கு மணியளவில் கச்சின் மாநிலத்தின் பகந்த் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பகந்த் பகுதியில் உள்ள பச்சை மாணிக்கக் கற்களை வெட்டி யெடுக்கும் சுரங்கம் தடைசெய்யப் பட்டுள்ளது.
அங்கு வேலையின்மை மற்றும் கொரோனா பாதிப்பினால் ஏற்பட்டுள்ள வறுமை காரணமாக மக்கள் பச்சை மாணிக்கக் கற்களை வெட்டியெடுக்கின்றனர். காணாமல் போனவர்களில் பெரும்பாலானோர் சட்டவிரோதமாக பச்சை மாணிக்க கற்களை வெட்டி யெடுக்கும் சுரங்கத் தொழிலாளர்கள் என்று கூறப்படுகிறது. சுமார் 200 மீட்புக் குழுவினர், காணாமல் போனவர் களை தேடி வருகின்றனர். இறந்தவர் களை சிலர் படகுகளை பயன்படுத்தி அருகில் உள்ள ஏரியில் தேடிவருவ தாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மியான்மர் செய்தி நிறுவனமாக மிஸ்ஸிமா, பகந்த்தில் ஏற்பட்ட நிலச் சரிவில் ஏராளமானோரைக் காண வில்லை எனத் தெரிவித்துள்ளது.