tamilnadu

img

சென்னையில் முதல்வர், ஆளுநர், தலைவர்கள் நேரில் அஞ்சலி

தோழர் கோடியேரி பாலகிருஷ்ணன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தி, சிபிஎம் கேரள மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் மாஸ்டர், தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்த காட்சி.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அஞ்சலி செலுத்திய பின் குடும்பத்தினருக்கு ஆறுதல்

குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்

தோழர் கோடியேரி உடலுக்கு சிபிஎம் மூத்த தோழர் டி.கே.ரங்கராஜன் அஞ்சலி.

சென்னை, அக். 2 - தோழர் கோடியேரி பாலகிருஷ்ணன் உடல் ஞாயிறன்று (அக்.2) விமானம் மூலம்  கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்டது. கேரள மாநிலத்தின் மகத்தான தலை வர்களில் ஒருவரான தோழர் கோடி யேரி பாலகிருஷ்ணன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, உயர் சிகிச்சைக் காக சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அக்டோபர் 1 அன்று இரவு காலமானார்.

முதல்வர், ஆளுநர் நேரில் அஞ்சலி

இதனையறிந்து மருத்துவமனைக்கு இரவு உடனடியாக வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட் டோர் தோழர் கோடியேரி பால கிருஷ்ணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி,  குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரி வித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கேரள மாநிலச் செயலாளர் எம். வி.கோவிந்தன் மாஸ்டர், தமிழ்நாடு  மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோரிடம் விவரங்களை கேட்டறிந்த னர். கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஏ.கே.பத்மநாபன், மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன், மாவட்டச் செயலாளர்கள் எல்.சுந்தராஜன், ஆர்.வேல்முருகன், ஜி.செல்வா, மாநி லக்குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதனைத்தொடர்ந்து அவரது உடல் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பதப்படுத்தப் பட்டு அக்டோபர் 2 ஞாயிறு காலை சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. கட்சித் தலை வர்கள் விமான நிலையம் வந்து, முற்பகலில் தனி விமானம் மூலம் அவரது உடலை கண்ணூருக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், துணைச் செயலாளர் நா. பெரியசாமி ஆகியோர் தோழர் கோடி யேரி பாலகிருஷ்ணன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

ஆளுநர் இரங்கல்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது சுட்டுரையில், “கோடியேரி பால கிருஷ்ணனின் மறைவு அதிர்ச்சி யளிக்கிறது. சிறந்த அரசியல் தலை வரும், பண்புள்ள மனிதரும், மிகவும் அன்பான நண்பருமான அவர் கேரள மக்களால் நீண்ட காலம் நினைவு கூரப்படுவார். அவரது ஆன்மா நித்திய சாந்தி அடையட்டும்” என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

டியுஜே

டியுஜெ மாநிலத் தலைவர் பி.எஸ்.டி.புருஷோத்தமன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “கேரள உழைக்கும் பத்திரி கையாளர் சங்கத்தின் வளர்ச்சிக்கு ஆதர வாக நின்றவர் கோடியேரி பாலகிருஷ் ணன். பல மாநாடுகளில் பங்கேற்று வழி காட்டியாக திகழ்ந்தார்.  கொரோனா வின் போது ஒன்றிய  அரசு கொண்டு  வந்த தொழிலாளர்கள், பத்திரிகை யாளர்களுக்கு எதிரான சட்டத்தை ரத்து செய்ய தன் இறுதி மூச்சு வரை குரல் கொடுத்தார். பத்திரிகையாளர் நலனுக்காக தொடர்ந்து போராடிய, உன்னத தலைவ ருக்கு  வீரவணக்கம் மற்றும் செவ்வஞ்சலி” என்று குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் இன்று புகழஞ்சலி கூட்டம்

கட்சியின் சென்னை மாவட்டக்குழுக் கள் சார்பில் இன்று (அக்.3) மாலை 5 மணி அளவில் கேரள சமாஜம் அரங்கில் தோழர் கோடியேரி பாலகிருஷ்ணனுக்கு புகழஞ்சலி கூட்டம் நடைபெறுகிறது. இதில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

 

;