சென்னை, டிச.5- தமிழ் படிக்காத - தமிழ் மொழி தெரியாதவர்களை பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர்களாகப்பணி அமர்த்துவது தமிழ்நாட்டில் உள்ளவர்க ளுக்குப் பாதகமானது. கற்பித்தலிலும் பிரச்சினை ஏற்படும். எனவே, வரும் 8 ஆம் தேதி முதல் நடக்கும் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்து, தமிழ் படித்தவர்களுக்கே விரிவு ரையாளர் வாய்ப்பு என்கின்ற ரீதியில்புதிய அறிவிப்பினை தமிழ்நாடு அரசு வெளியிடவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேட்டுக் ்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை: கடந்த 2017 இல், தமிழ்நாட்டிலுள்ள அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் காலி யாக இருந்த விரிவுரையாளர் பணியிடங்க ளுக்கானத் தேர்வில், தமிழ் தெரியாத வெளிமாநிலத்தவர்கள் பெருமளவில் தேர்ச்சி பெற்றனர்.
இதனை அப்போதே கண்டித்து (11.11.2017) அறிக்கை வெளியிட் ்டோம். கரோனா தொற்றின் காரணமாகத் தள்ளிப் போடப்பட்டுவரும் டிசம்பர் 8, 9,10,11 மற்றும் 12 ஆகிய நாள்களில் நடக்கவுள்ளது. இத்தேர்வில், தமிழ் அறியாத வெளி மாநிலத்தவர்கள் ஏராளமானோர் விண்ணப்பி த்துள்ளனர். தமிழ் அறியாதவர்கள் அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் விரிவுரையாளர்களாகத் தேர்வானால், தமிழ்நாட்டில் படித்துத் தேர்வாகியுள்ள மாணவர்களின் வேலை வாய்ப்புப் பறிபோகும் ஆபத்து உள்ளது.
வேலைவாய்ப்பு என்ற அளவில் மட்டுமல்ல, கல்வியிலும் இது பாதிப்பை ஏற்படுத்துமே! கிராமப்புறங்களில் தமிழ்வழியில் படித்துவிட்டு பல்தொழில் ்நுட்பக் கல்லூரிகளில் சேரும் தமிழ்நாடு மாணவர்களுக்குப் பிற மொழியினரால் தமிழில் விளக்கம் சொல்லி பாடம் நடத்த முடியுமா? பல்வேறு மாநிலங்களில், அம்மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அரசுத்தேர்வு எழுத முடியும் என்ற நிலையில் கடந்த அதிமுக ஆட்சியால் ஏற்பட்ட இந்த நிலையை உடனடியாக மாற்றவேண்டியது அவசியமாகிறது. அவ்வகையில், இந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடமும் முக்கியமா னதாகும். அதிலும் தமிழ் தெரிந்தோர் மட்டுமே தேர்வு எழுதிடுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்யவேண்டும. எனவே, இதன் முக்கியத்துவம் கருதி, டிசம்பர் 8 முதல் நடைபெறவுள்ள பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை நிறுத்தி, புதிய அறிவிக்கையை வெளியிட்டு, 01.12.2021 அன்று வெளியிடப்பட்ட மனிதவள மேலாண்மைத் (எம்) துறை, அரசாணை (நிலை) எண்: 133 இல் வகுக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகளின்படி தேர்வு நடத்துவதே சாலச் சிறந்ததாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.