மதுரை, டிச.30- “தோல்” நாவலை படமாக்கினால் நல்லது என அந்த நாவலுக்கு விமர்சனம் எழுதிய சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் என். நன்மாறன் கோரிக்கை விடுத்தார். மதுரையில் சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளா் டி. செல்வ ராஜூக்கு நினைவேந்தல் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலை ஞா்கள் சங்கம். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் மணியம்மை மழலை யர் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் சட்ட மன்ற முன்னாள் உறுப்பினர் என். நன்மா றன் பேசியதாவது: சாகித்ய அகாதெமி விருது பெற்ற டி. செல்வராஜின் ‘தோல்’ நாவலுக்கு விமா்சனம் எழுதக்கூடிய வாய்ப்பைப் பெற்றேன். எழுத்தாளா் செல்வராஜ் திண்டுக் கல்லில் தோல் பதனிடும் தொழிலாளர்களு டனேயே வாழ்ந்தவர். அவர்களின் வலியை நேரடியாக உணர்ந்தவர். எனவேதான், அவ ரால் இந்த நாவலை ஆழமாகவும், அழுத்த மாகவும் படைக்க முடிந்தது. அந்த நாவல் நல்ல திரைக்கதை அம்சம் கொண்டுள்ளது. திரைப்பட இயக்குநர் பாலா தோல் நாவலை படமாக்கினால் சிறப்பாக இருக்கும். செல்வராஜின் படைப்பு கள் சோசலிச யதார்த்தம் நிறைந்தது. அவா் இளைஞர்களுக்கும் வழிகாட்டியாக இருக்கி றார். குடியுரிமை திருத்தச் சட்டத்தை அனை வரும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும் என்றார். இதில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர்-கலைஞர்கள் சங்கத்தின் மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் ஸ்ரீரசா, செயலர் அ.ந. சாந்தாராம், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநில தலைமைக் குழு உறுப்பி னா் தி.சு. நடராஜன், மாநிலச் செயலாள பா. ஆனந்தகுமார் , மதுரை மாவட்டத் தலைவா் மு. செல்லா, நியூ செஞ்சுரி புத்தக நிலைய மண்டல மேலாளர் அ. கிருஷ்ணமூர்த்தி, செம்மலர் துணையாசிரியரும் ஓவியருமான தி.வரதராசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.