tamilnadu

img

ஆளுநர் போட்டி அரசாங்கமா?

கள்ளக்குறிச்சி, செப். 13 - தமிழகத்தில் மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக ஆளுநர் போட்டி அரசு நடத்து வதற்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கண்டனம்  தெரி வித்தார். கள்ளக்குறிச்சியில் செவ்வா யன்று (செப். 13) செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது: தமிழக ஆளுநர் ரவி திரும்பத் திரும்ப அரசியல் சட்டத்திற்கும், தமிழக அரசுக்கும்  எதிராக ஒன்றிய அரசின் கொள்கைகளை நடை முறைப்படுத்தத் தமிழகத்தில் முயல்வது அரசியல் சட்டத்திற்கும் நெறிமுறைகளுக்கும் விரோத மானது. புதிய கல்விக் கொள்கை,  நீட் தேர்வு குறித்து தமிழக அரசு  ஒரு முடிவு எடுத்த பிறகு ஆளுநர் முரணாகப் பேசுவது போட்டி அர சாங்கம் நடத்துவது போல் உள்ளது. தமிழ்நாட்டில் திமுக அரசை முடக்குவதற்கான  வேலையை ஆளுநர் செய்து வருகிறார். இது  கண்டனத்திற்குரியது. ஒரு ஆளுந ராக நியமிக்கப்பட்டவர் அனை வருக்குமானவர். அவர் ஆர்எஸ் எஸ், பாஜக, செயல்பாடுகளைப் பேசுவது அரசியல் சட்டத்திற்கு ஏற்புடையதல்ல.

மின்கட்டணத்தைக் குறைத்திடுக! 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கனவே மின் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தது. அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட் கள்மீது ஒன்றிய அரசு  விதித்துள்ள ஜிஎஸ்டி வரியால் மக்கள் தாங்க  முடியாத சுமையைச் சுமந்து கொண்டுள்ளனர். இந்தநிலையில்  தமிழக அரசு உத்தேச மின்கட்ட ணத்தில் சிறு மாற்றம் கூடச் செய்யா மல் அப்படியே அறிவித்துள்ளது சரியல்ல. இதனால் ஏழை எளிய  நடுத்தர மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். மின் கட்டணத்தைக் குறைக்கவேண்டும் என்று தமிழக முதல்வரைக் கேட்டுக்கொள் கிறேன்.  ஒவ்வொரு ஆண்டும் 6 சதவீதம் மின்கட்டணம்  உயர்ந்தால் பொது மக்கள் மின் விளக்கை விட்டு மண்ணெண்ணெய் விளக்குக்கு செல்லும் சூழல் ஏற்படும்.  

சமூக ஆர்வலர் கொலை 

கரூர் மாவட்டத்தில் சட்டத்திற்குப் புறம்பாகக் கல் மற்றும் மணல் குவாரிகளை எதிர்த்து  சமூக செயல்பாட்டாளர் ஜெக நாதன் போராடி வந்தார். அதனால் சம்பந்தப்பட்ட கல்குவாரி மூடப் பட்டுள்ளது.  மூடப்பட்ட கல்குவாரி க்குச் சொந்தமான லாரி ஏற்றப்பட்டு  அவர் இறந்துள்ளார். இது விபத்து அல்ல! படுகொலை. சமூக விரோதி கள் வளர்வது நல்லதல்ல. காவல்துறை இவர்களை அடை யாளம் கண்டு சரியான நட வடிக்கை எடுக்க வேண்டும். படுகொலை செய்யப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

நீதிபதியின் வரம்பு மீறல்

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல்வேறு கட்ட போராட்டத்தை நடத்தியுள்ளது.  முதல்வரைச் சந்தித்து மனுவும் அளித்துள்ளது. அதேபோல் பாதிக்கப்பட்ட ஸ்ரீமதி யின் பெற்றோர்கள் சந்தித்து மனு  அளித்துள்ளனர். அதற்கு முதல்வர் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தயவு தாட்சண்யம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி நம்பிக்கை ஏற்படுத்தினார். ஆனால் நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு இந்த வழக்கே தலைகீழாக மாற்றப்பட்டுள்ளது.  ஜாமீன் மனுவை விசாரித்த  நீதிபதி கள்ளக்குறிச்சி மாணவி கொல்லப்படவில்லை எனக் கருத்து  கூறியிருப்பது வியப்பாக உள்ளது.  இதுகுறித்து சம்பந்தப்பட்ட நீதிபதி மீது புகார் கொடுக்க தலைமை நீதிபதியிடம் அனுமதி கேட்டுள்ளோம்.  நீதிபதி வரம்பை மீறி செயல்பட்டுள்ளார். இவரது தீர்ப்பு காவல்துறை மற்றும் சிபி சிஐடி விசாரணையைப் புரட்டிப் போடும் சூழலை ஏற்படுத்தும். வேடிக்கை பார்க்க வந்தவர்களை வீடியோவை பார்த்து கைது செய்யும் காவல்துறை, பள்ளி நிர்வா கத்திற்கு ஆதரவாகச் செயல்படு கிறதோ என்ற சந்தேகம் ஏற்படு கிறது. 

பத்திரிகையாளர் கைதுக்கு கண்டனம்

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் மாணவி தரப்பு  நியாயங்களைப் பதிவு செய்த எழுத்தாளர் சாவித்திரி  கண்ணன் மீது நடவடிக்கை எடுத்தது சரியல்ல. ஆனால், மாண விக்கு எதிராக சமூக வலைத் தளங்களில் பதிவு செய்தவர்கள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? காவல்துறையின் தவறான செயல்பாடுகளைக் கண்டி த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

அதிமுக ஆட்சியின் முறைகேடு

அதிமுக ஆட்சியில் பல்வேறு  ஊழல் முறைகேடு நடந்துள்ளது. அது குறித்து நடைபெறும் சோத னைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது சரியானது அல்ல. தவறு யார் செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.   இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறினார். பேட்டியின் போது  கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே. சாமுவேல்ராஜ்,  மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன் ஆகியோர் உடன்  இருந்தனர்.

 

;