tamilnadu

img

பன்றி காய்ச்சல் வேகமாக பரவுகிறதா?அமைச்சர் விளக்கம்

சென்னை, செப். 19- தமிழகம் வந்துள்ள மேகா லயா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஜேம்ஸ் ஜே.கே.சங்கமா சென்னையில் மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்தித்தார். அப்போது இரு மாநிலங்கள் இடையே ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல அவசர சிகிச்சை பயிற்சி, உயிர்காக்கும் மயக்கவியல் திறன் பயிற்சி மற்றும் மீயொலி கருவி பயிற்சி தொடர்பான புரிந்துணர்வு  ஒப்பந்தம் கையெழுத்திடப் பட்டது.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த  அமைச்சர் மா.சுப்பிர மணியன், “தமிழகத்தில் பருவ மழைக் காலங்களில் காய்ச்சல் அதிகரிப்பது வழக்கம்தான். சாதாரண காலங்களில் 1 விழுக்காட்டினருக்கு காய்ச்சல் பாதிப்பு இருக்கும். தற்பொழுது ஒன்றரை விழுக்காடாக பாதிப்பு உள்ளது.

இதனால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை” என்றார். பன்றி காய்ச்சலால் தமிழ்நாடு முழுவதும் ஜனவரி மாதம் முதல் செப்.18 வரை 1044 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். மேலும் ஒரே நாளில் 368 நபர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள் ளனர் என்றும் அவர் கூறினார். லேசான அறிகுறி இருந் தால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். பள்ளியில் ஆசிரி யர்களும் கண்காணித்து அறிகுறி இருந்தால் பெற்றோர்களுக்கு தகவலளித்து வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும். அதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய அவசியம் எழவில்லை. எனது பேரன்,பேத்திக்குமே கூட காய்ச்சல் பாதித்து 3 தினங்கள் சிகிச்சை பெற்று தற்பொழுது நல முடன் உள்ளனர். இதனால் அச்ச ப்படத்தேவையில்லை என்று அமைச்சர் தெரிவித்தார்.

;