tamilnadu

img

கொடுஞ்சிறைக்குள் அகப்பட்ட மனிதர்களைப் போல் வாழும் நிலை

சென்னை, டிச. 2- பெரும்பாக்கத்தில் அரசால் குடி யமர்த்தப்பட்டவர்கள் கொடுஞ் சிறைக்குள் அகப்பட்ட மனிதர் களைப் போல் வாழும் நிலை உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார். சென்னை அருகே உள்ள சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பெரும்பாக்கம், சுனாமி குடியிருப்பு, செம்மஞ்சேரி ஆகிய இடங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வியாழனன்று (டிச.2)  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் பார்வையிட்டு அங்கு வசிக்கும் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களி டம் கூறியதாவது:

சென்னை மாநகரத்தில் வாழ்ந்த குடிசைவாழ் மக்களை எல்லாம் அப்புறப்படுத்துகிறோம் என 3 லட்சத்திற்கும் மேற்பட்டோரை அப்புறப்படுத்தி பெரும்பாக்கத்தில் 153 பிளாக்கில் 8 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளை  கட்டி அதில் குடியமர்த்தியிருக்கிறார்கள். இந்த மக்கள் மழைக்காலங்களில் சொல்லமுடியாத அளவிற்கு துன்பங்களை அனுபவித்துள்ளனர். 8 மாடி குடியிருப்புகளுக்கு மேலே செல்ல லிப்ட் வசதி செய்யப்பட்டி ருந்தாலும் மின் தடை காரணமாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக லிப்ட் இயங்கவில்லை. இதனால் குடிநீர் கேனை கூட மேலே எடுத்துச் செல்ல முடியாத நிலையில், கொடுஞ் சிறைக்குள் அகப்பட்ட மனிதர்களை போல் வாழக்கூடிய நிலைமையில் இந்த மக்கள் இருந்துள்ளனர். எப்போது மழை பெய்தாலும் இந்த பகுதிகளில் தண்ணீர் தேங்கி மக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.

மேலும் தரைத்தளத்தில் வசிப்பவர் களின் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் செல்வதால் அவர்கள் பெரும் இழப்பை சந்திக்க வேண்டி யுள்ளது. 3 லட்சம் மக்களை குடிய மர்த்தும் தமிழக அரசு, இந்த பகுதி யில் போதுமான அளவு மழைநீர் வடி கால் வசதி இருக்கிறதா என்பதை பற்றி கவலைப்படாமல், மக்களை அப்புறப்படுத்தி அனாதைகளைப் போல், அகதிகளைப் போல் குடிய மர்த்தி இருக்கிறார்கள். இந்த மக்கள் சிறைக் கைதிகளைப் போல் மோசமான நிலையில் இருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது.

ஏற்கனவே இவ்வளவு குடி யிருப்புகளில் வசிக்கும் மக்கள் அவ திப்பட்டுக் கொண்டிருக்கும் போது, மேலும் 2 லட்சம் மக்களை குடி யமர்த்துவதற்கான கட்டுமான பணி கள் நடைபெற்றுக் கொண்டிருக் கின்றன. மழைக்காலத்தில் இங்கு ஏற்படும் இடர்பாடுகளுக்கு என்ன  மாற்று வழி?  மின்சார கட்டணம் செலுத்துவதற்கு கூட இங்கு அலு வலகம் இல்லாததால், 5 கிலோ மீட்டர் தூரம் சென்று சிட்லப்பாக்கத்தில் செலுத்த வேண்டியுள்ளது. இந்த குடியிருப்புகளுக்கு ஏற்ற போது மான சுகாதார வசதி இல்லை. ஒருங்கிணைந்த ஆரம்ப சுகாதார நிலையம் இருந்தாலும், கர்ப்பிணிப் பெண்கள் பிரசவம் பார்ப்பதற்கு கோஷா மருத்துவமனைக்குத்தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. போதுமான போக்குவரத்து வசதி ஏற்படுத்தித் தரவில்லை. எதிர்பாராமல் அதிக மழை பெய்துள்ளது என அரசு கூறுவதை மறுக்கவில்லை. ஆனால் புதிய பகுதிகளில் மக்களை குடியமர்த்தும் போது, அதற்கேற்ற அடிப்படை வசதிகளை செய்த பின்னரே அவர்களை குடியமர்த்த வேண்டும். எந்த அடிப்படை வசதியும் செய்து கொடுக்காமல் கடந்த அதிமுக ஆட்சியில் மக்களை குடியமர்த்தி விட்டார்கள். மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் இந்த பகுதி மக்களின் அடிப் படை தேவைகளை செய்து கொடுக்க தமிழக முதல்வரிடம் வலி யுறுத்துவோம். அதற்கான மாற்று வழிகளையும் அவரிடம் வழங்கி நிறைவேற்ற வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கள் ஏ.பாக்கியம், க.பீம்ராவ், தென் சென்னை மாவட்டச்செயலாளர் ஆர்.வேல்முருகன், சோழிங்கநல்லூர் பகுதி செயலாளர் ஜெயவேல் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வனஜகுமாரி, சித்ரகலா உள் ளிட்டோர் உடனிருந்தனர்.

;