tamilnadu

img

செயற்கைநுண்ணறிவு ஆய்வு இருக்கை எம்ஜிஆர் மருத்துவ பல்கலை.யில் இன்று துவக்கம்

சென்னை, அக்.9- மருத்துவத்தில் ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவிற்காக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்து வப் பல்கலைக்கழகத்தில் சண்முக சுந்தரம் இருக்கையை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திங்கட்கிழமை (அக்.10) தொடங்கி வைக்கவுள்ளார்.  இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் பதிவாளர்  வெளியிட்டுள்ள அறி விப்பில், ‘மருத்துவம் மற்றும் சார் மருத்துவத்துறைகளின் கல்வித்தரம் மற்றும் ஆராய்ச்சி மேம்பாடு ஆகிய வற்றை உயர்த்துவதில், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் உறுதியுடன் செயல் படுகிறது. இந்த வகையில், பல்கலைக்கழக வல்லுநர் குழுவின் பரிந்துரையின்படி பல்கலைக்கழகச் சிறப்பு இருக்கைகள் தோற்றுவிக் கப்பட உள்ளன.   தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முதல் சிறப்பு இருக்கையாக சண்முக சுந்தரம் இருக்கை ஏற்படுத்தப் பட்டுள்ளது.மருத்துவத்தில் ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு என்பதற்கான இருக்கை யாக இது இருக்கும். சண்முகசுந்தரம் இருக்கைக்கு நியமிக்கப்படுகிற பேராசிரியர், ஆண்டுக்கு ஒரு முறை பல்கலைக்கழகத்திலும், இணைப்புக் கல்லூரிகளிலும் மருத்துவச் செயல்பாடுகளில் ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்து ஏற்பட்டுள்ள மேம்பாடுகளை மாணவர்களுக்கு விரித்துரைப்பார். நடைமுறை வகுப்புகளையும், பயிலரங்கங்களையும் நடத்துவார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மதியம் 12.30 மணிக்கு, பல்கலைக் கழக வெள்ளிவிழாக் கலையரங்கில் டாக்டர் சண்முகசுந்தரம் இருக்கை யினைத் தொடங்கி வைக்கிறார். மருத்து வம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விழா வில் பங்கேற்றுச் சிறப்புரையாற்று கிறார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.