கொச்சி, ஜூலை 2 - மரணமடைந்தவரின் இறுதி நிகழ்ச்சி கள் நடத்த இடநெருக்கடியால் கவலையில் இருந்த குடும்பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எர்ணாகுளம் ஏரியா கமிட்டி அலுவலகம் இடமளித்து உதவியது. கட்சி அலுவலகம் அருகே வசிக்கும் காவில்மேட்டில் கே.பி.சாந்தா (65) என்பவ ரின் இறுதிச் சடங்குக்காக கட்சி அலுவல கத்தில் உள்ள பாப்பஞ்சேட்டன் நினைவு அரங்கம் வழங்கப்பட்டது. அங்கு நடத்த திட்டமிட்ட நிகழ்ச்சிகளை வேறொரு நாளுக்கு ஒத்திவைத்து இறுதிச் நிகழ்ச்சி கள் ஏற்பாடு செய்யப்பட்டன. சிறுநீரக நோய் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாந்தா சனிக்கிழமை காலை உயிரிழந்தார். உடலை வீட்டிற்கு கொண்டு வந்தாலும் சடங்குகள் செய்ய போதிய இடவசதி இல்லை. இதுகுறித்து அப்பகுதி சிபிஎம் செயலாளர் சி.மணியிடம் சாந்தாவின் உறவினர்கள் நேரில் தெரிவித்தனர். இதையடுத்து சாந்தாவின் இறுதி நிகழ்ச்சிக்காக அரங்கம் திறக்கப்பட்டது. அதிகாலை 3 மணிக்கு பாப்பஞ்சேட்டன் நினைவு மண்டபத்துக்கு உடல் கொண்டு வரப்பட்டு சடங்குகள் செய்யப்பட்டன. மாலை 4 மணிக்கு பச்சாலம் சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.