tamilnadu

குரூப்-4 தேர்வு முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை. டிச.14-  கடந்த 2019-ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணையை , சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கை சிபிசிஐடி காவல்துறையிடமிருந்து சிபிஐக்கு மாற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்து வந்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, தமிழ்நாடு அரசுப் பணியா ளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில், முறைகேடு உறுதி செய்த பிறகும், தேர்வை ரத்து செய்யாதது ஏன் என கடந்த வாரம் கேள்வி எழுப்பியிருந்தது. இந்நிலை யில், வழக்கின் தீர்ப்பு செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.

தமிழகத்தில் 2019 -இல் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில், இராமேஸ்வ ரம் மையத்தில் தேர்வு எழுதியவர்கள் முதல் நூறு இடங்களில் வெற்றி பெற்றதாக அறி விக்கப்பட்டது. இந்தத் தேர்வில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்ற னர். வழக்கு விசாரணை சரிவர நடைபெறாத தால், சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரி மதுரையைச் சேர்ந்த முகமதுரஷ்வி உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு கடந்த வாரம் செவ்வாய்க் கிழமை விசாரணைக்கு வந்தபோது, 2016-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய கிராம நிர்வாக அலுவலர், குரூப் 2, குரூப் 4 தேர்வுகளில் நடந்த முறைகேடு தொடர்பாக 194 பேர் கைது செய்யப்பட்டுள்ள தாக சிபிசிஐடி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதைப் பதிவு செய்த நீதிபதி கள் விசாரணையை ஒத்திவைத்தனர். இந்த நிலையில் வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, பி.வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன் கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், தேர்வு முறைகேடு தொடர்பாக கீழ்மட்ட ஊழியர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் கீழக்கரை மற்றும் இராமேஸ்வரம் தேர்வு மையங்களில் நடத்தப்பட்ட தேர்வு ரத்து செய்யப்பட்டதா? எனக் கேள்வி எழுப்பியபோது, அரசு தரப்பில் தேர்வு ரத்து செய்யப்படவில்லை என பதி லளிக்கப்பட்டது. தொடர்ந்து நீதிபதிகள், தேர்தலில், ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவில் முறைகேடு நடக்கும்போது, அந்த வாக்குச் சாவடிக்கு மட்டும் மறு வாக்குப்பதிவு நடத்தப் படும்போது, தேர்வு மையங்களில் முறை கேடு நிகழ்ந்தது உறுதி செய்யப்பட்ட பிறகும் தேர்வு ரத்து செய்யப்படாது ஏன்? எனக் கேள்வி எழுப்பினர். டின்என்பிஎஸ்சி தரப்பில், தேர்வு எழுதிய பின்னர், விடைத்தாள்களைக் கொண்டு செல்லும் வழியில் முறைகேடு நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு நீதிபதிகள், ஏடிஎம் மையங்களு க்கு பணம் எடுத்துச் செல்லும் வாகனங்க ளுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்படுகை யில், பல லட்சக்கணக்கான மாணவர்க ளின் வாழ்க்கையோடு தொடர்புடைய விடைத்தாள்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்காதது ஏன்? எனக் கேள்வி எழுப்பினர். பின்னர் நீதிபதிகள், இது மிகப் பெரும் மோசடி என்பதால், டிஎன்பிஎஸ்சி மீது மக்கள் இழந்த நம்பிக்கையை சரிசெய்யும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கூறி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர். இந்த வழக்கு செவ்வாயன்று விசார ணைக்கு வந்த போது, குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்தது தொடர்பான வழக்கை  சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டு தீர்ப்பளித்த னர்.

;