தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மதுரை மாவட்டப்பேரவை சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் செம்மலர் ஆண்டுச் சந்தாக்களை, மாவட்டத் தலைவர் குரு. தமிழரசுவிடமிருந்து, செம்மலர் ஆசிரியர் குழு சார்பில் எஸ்.பி.ராஜேந்திரன் பெற்றுக்கொண்டார். மாநிலப் பொருளாளர் என்.ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். டிசம்பர் 29 அன்று மதுரையில் நடைபெறவுள்ள மாநிலப் பேரவையில் கணிசமான சந்தாக்களை அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.