tamilnadu

img

தியானமும்... சதாவதானமும்...

பல கோடி செலவில் இயக்கப்படும் “தியானம்”குறும்படத்தில் நடிக்கும் கடவுளின் அவ தாரத்துக்கு,  குமரி மண்ணில் வாழ்ந்து மறைந்த சதாவ தானி செய்குத் தம்பி பாவலர் பற்றி யாராவது சொல்லக்கூடாதா ?  தியானம் என்பது ஒற்றைப் புள்ளியில் தன் மனதைக் குவிப்பது ஆகும். அதாவது சுற்றிலும் நடக்கும்  எதைப்பற்றியும் கவலைப் படாமல் ஆன்மீகத்தில் லயிக்கும் ஓர் போக்கு ஆகும். ஆயின்  “சதாவதானம்” என்பது யாது? கம்பீரமாக நிற்கிறார் அந்த மனிதர். சுற்றிலும் நூற்றுக்கணக்கான தமிழறிஞர்கள். அவரை நோக்கி  கேள்விக் கணைகள் நீள்கின்றன. வந்து விழுகின்ற கேள்விகளுக்கு எல்லாம் சுளீர் பதில்கள் தெறிக்கின்றன அவரிடமிருந்து. தன்னிடம் கேள்வி கேட்ட 100 பேருக்கும் ஒரே மூச்சில் வரிசையாகப் பதில் சொல்லி அசத்த, கூடி நின்ற அறிஞர்கள் கூட்டம் ஆச்சர்யத்தில் திக்குமுக்காடுகிறது.  சங்கப் பாடலின் ஏதோ ஒரு வரியைச் சொன்னால் போதும், அதை முழுமையாகப் பாடி முடிப்பார்.  1,000 ஆண்டுகளுக்கு முன்னால் ஏதாவது ஓர் ஆண்டு, மாதம், நாள் சொன்னால், அடுத்த நொடி கிழமை யைச் சரியாகச் சொல்வார். அவர்தான் செய்குத் தம்பிப் பாவலர்.  அடுத்தடுத்து பெரிய எண்களை வரிசையாகச் சொன்னால், அவற்றின் கூட்டுத் தொகை, பெருக்குத் தொகைகளை உடனே சொல்வது, நிகழ்ச்சியின் இடையே அவ்வப்போது கொடுக்கப்படும் நீரை ருசி பார்த்துவிட்டு,

இறுதியில் அது எந்தப் பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்டது என்று சரியாகச் சொல்வது, நிகழ்ச்சியின் இடையில் தன் மீது வீசப்பட்ட நெல்மணி கள், பட்டாணிகள், கற்கள் எத்தனை என கணக்குச் சொல்வது என இவர் ஆச்சர்யங்களால் நிறைந்தவர். இப்படி எட்டு விஷயங்களை நினைவில் வைத்துச் சொல்வதற்கு அஷ்டாவதானி என்று பெயர். பத்து என்றால் தசாவதானி. இவர் இப்படி 100 விஷயங்களை நினைவில் வைத்து, ஒரே மூச்சில் திரும்பச் சொல்லக் கூடியவர் என்பதால் ‘சதாவதானி’. செய்குத் தம்பிப் பாவலர் 115 ஆண்டுகளுக்கு முன் 1907ல் இந்தச் சாதனையை நிகழ்த்தினார். (தகவல் ஆதாரம் : தினமணி) நாட்டுக்கு தலைமை தாங்குபவர் தியானத்தில் திளைக்கும் நபராக இருக்க வேண்டுமா? நாட்டில் சுற்றி எழும் ஆயிரம் சவால்களுக்கு முகம் கொடுக்கும் சதாவதானியாக இருக்க வேண்டுமா? இப்படி யாராவது கேட்டுத் தொலைக்கப் போகிறீர்கள்,  அது ராஜத் துவேஷம். தேசத்துரோகம். - சுபொஅ.

;