tamilnadu

19 மருத்துவப் படிப்புகளுக்கு இன்று முதல் கலந்தாய்வு

சென்னை,டிச.21- தமிழ்நாட்டிலுள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்து வம் சார்ந்த 19 படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை தொடங்கி யுள்ளது. பி.எஸ்.சி. நர்சிங், பி.பார்ம், பி.பி.டி., பி.ஓ.டி., பி.எஸ்.சி. ரேடியோ  கிராபி, ரேடியோதெரபி, பி.எஸ்.சி. கார்டியாக் டெக்னாலஜி உள்ளிட்ட  19 மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் செவ்வா யன்று(டிச.21) வெளியிடப்பட்டது. அரசு மருத்துவக் கல்லூரிகளில்  2,276 இடங்களும், தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 13,832 இடங்களும் உள்ளன. இந்த  இடங்களுக்கான கலந்தாய்வு புதன்கிழமை(டிச.22) முதல் தொடங்குகிறது. பி.எஸ்.சி. நர்சிங் படிப்பில் அரசு கல்லூரிகளில் 250 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 7,850 இடங்களும் உள்ளன. இந்த இடங் களை நிரப்புவதற்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு டிச.22 அன்று நடக்கிறது. பொதுப்பிரிவு கலந்தாய்வு டிச.23 முதல் நடை பெறுகிறது. மருத்துவம் சார்ந்த பட்டப்படிப் பில் சேருவதற்கு 64,900 விண்ணப் பங்கள் இணைய தளம் வழியாக பெறப்படுகிறது. மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கு 13,832 இடங்கள் உள்ளன. இவற்றின் முழு விவரங்கள் மருத்துவ கல்வி  இயக்குனரகத்தின் தேர்வு குழுவின்  அதிகாரப்பூர்வ இணைய தளங்க ளில் வெளியிடப்படும் என்று மருத்துவ மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் வசந்தாமணி தெரிவித்திருக்கிறார்.

;