tamilnadu

img

முன்னாள் அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி

சென்னை, ஜூலை 10- திடீர் உடல்நலக் குறைவு காரணமாக முன்னாள் அமைச் சர் ஆவடி நாசர்  சென்னை அப்பல்லோ மருத்து  வமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் கடந்த 2021 ஆம்  ஆண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  தலைமையில் திமுக அரசு பதவியேற்ற  போது பால்வளத்துறை அமைச்ச ராக ஆவடி நாசர் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர், அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டு பால்வளத்துறை அமைச்சராக மனோ தங்கராஜ் பொறுப்பேற்றார். இந்நிலையில், முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி  நாசருக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அவரது உடல்நிலை குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை.