tamilnadu

img

ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் நடைமுறையை கைவிடுக!

வேலூர், செப். 24- ஓய்வு பெறும் நாளில் தற்காலிகப் பணிநீக்கம் செய்கிற நடைமுறை முற்றி லும் கைவிட வேண்டும் என  தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஓய்வூதியர்கள் சங்கத்தின்  மாநில மாநாடு வலியுறுத்தி யுள்ளது. சங்கத்தின் 2ஆவது மாநில மாநாடு வேலூரில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் ச.ராமமூர்த்தி தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் மு.பரமேஸ்வரன் சங்கக் கொடியை ஏற்றினார். வரவேற்புக்குழு தலைவர் பி.கிருஷ்ணமூர்த்தி வரவேற் றார். மாநில துணைத் தலை வர் ஆ.சுந்தரமூர்த்தி நாயனார் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.அன்பரசு மாநாட்டை துவக்கி வைத்துப்பேசினார். பொதுச் செயலாளர் பா.ரவி வேலை அறிக்கை யையும், பொருளாளர் மு.மகாலிங்கம் வரவு-செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர்.

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் ச.பாரி, ஊரக வளர்ச்சித்துறை பிரிவு அலுவலர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் கென்னடி பூபாலராயன், கருவூலம் (ம) கணக்குத்துறை மண்டல இணை இயக்குநர் சாந்தி மணி,  மாவட்ட கருவூல அலுவலர் ெஜ.விமலா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தமிழ்நாடு அரசு அனைத்து  துறை ஓய்வூதியர்கள் சங்கத்தின் மாநிலப் பொருளா ளர் என்.ஜெயச்சந்திரன் மாநாட்டை நிறைவு செய்து  பேசினார். வெ.கிருஷ்ண மூர்த்தி நன்றி கூறினார்.

தீர்மானங்கள்

ஓய்வூதியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை நிலுவை  இனங்கள் மற்றும் புகார் மனுக் களின் மீதான லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைகள், விசா ரணை அலுவலர்களின் துறை ரீதியான விசாரணைகளை தாமதமின்றி அரசு நிர்ண யித்துள்ள கால வரையறைக் குள் முடிக்க வேண்டும், ஓய்வு  பெறும் நாளில் தற்காலிக பணிநீக்கம் என்ற நடைமுறை முற்றிலும் கைவிடப்பட வேண்டும்.  ஓய்வு பெறும் நாளுக்கு 3 மாதங்களுக்கு முன்னரே ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு உரிய தீர்வு காணும் வகையில் விரைவு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும், காப்பீட்டு திட்ட அடையாள அட்டையை உடனே வழங்க வேண்டும், டிசம்பர் 20ஆம் தேதி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிர்வாகிகள்

கவுரவத் தலைவராக மு.பரமேஸ்வரன், மாநிலத் தலைவராக ச.ராமமூர்த்தி, பொதுச் செயலாளராக பா.ரவி, பொருளாளராக மு.மகாலிங்கம் ஆகியோர் புதிய நிர்வாகிகளாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
 

;