tamilnadu

img

தமிழ்நாடு வங்கியை உருவாக்குக!

சென்னை, அக். 8- தமிழ்நாடு வங்கியை உருவாக்க வேண்டும் என்று கூட்டுறவு வங்கி ஊழியர்  சம்மேளன மாநாடு வலியுறுத்தி உள்ளது. கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனத்தின் 8வது மாநில மாநாடு சனிக்கிழமையன்று (அக்.8) தோழர்கள் ஏ.ஜி.மனோகர கிருஷ்ணன், ஆர்.ஜெயச்சந்திரன் அரங்கில் (ஏகேஜி திருமண மண்டபம், காஞ்சிபுரம்) தொடங்கியது.

உண்மை மதிப்பு உயரவில்லை

பொது மாநாட்டை தொடங்கி வைத்து சம்மே ளன கவுரவ தலைவர் அ.சவுந் தரராசன் பேசுகையில், “ஊழி யர்களின் ஊதியம் உயர்ந்து  வருவதை போன்ற தோற் றத்தை உருவாக்கப்படுகிறது. நிறுவனங்கள் ஊதியத்திற் காக ஒதுக்கும் தொகையின் விழுக்காடு அளவு உயர வில்லை. ஊழியர்களின் உண்மையான ஊதிய மதிப்பு வீழ்ந்து வருகிறது”என்றார். “உரிமைக்காக போராடும் நிலையை மாற்றி; ஏற்கெனவே உள்ள சலுகைகளை பாது காக்க போராடும் நிலையை  முதலாளித்துவம் உருவாக்கி  வைத்துள்ளது. இதற்கெதி ராக பிற பகுதி மக்களை தொழிற்சங்கங்கள் அணி திரட்ட வேண்டும். மாநிலத்தின் அதிகாரத்தில் உள்ள கூட்டு றவு அமைப்புகளை ஒன்றிய அரசு விழுங்க முயற்சிக்கிறது. இதனை தடுக்க ஒன்றுபட்டு போராட வேண்டும்”என்றும் அவர் கூறினார்.

கொள்கை உறுதி தேவை

மாநாட்டிற்கு தலைமை  தாங்கி பேசிய சம்மேள னத் தலைவர் தி.தமிழரசு, “கூட்டுறவு வங்கிகளை ஒருங் கிணைத்து உருவாக்கப்பட்ட ‘கேரள வங்கி’ அம்மாநிலத் தின் 3வது பெரிய வங்கியாக உருவெடுத்துள்ளது. கடந்த நிதியாண்டில் கேரள வங்கி 1.13லட்சம் கோடியை கையாண்டுள்ளது. ஒரு சிறிய மாநிலம் இதனை  சாதித்துள்ளது. மிகப்பெரிய மாநிலமான தமிழகத்தில் மாநில, மாவட்ட கூட்டுறவு வங்கிகளை ஒருங்கிணைத்து ‘தமிழ்நாடு வங்கி’யை உரு வாக்கினால் பெரும் சாதனை படைக்க முடியும். மாநில அரசின் உரிமைகளை தக்க வைத்துக்கொள்ள, கொள்கை உறுதியோடு ‘தமிழ்நாடு வங்கி’யை உருவாக்க வேண் டும்”என்றார். சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன், இந்திய வங்கி ஊழியர் சம்மேளன (பெஃபி) அகில இந்திய செயலாளர் கே.கிருஷ்ணன், இணைச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன், இந்தியன் வங்கி ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் சுனில்  குமார் உள்ளிட்டோர் மாநாட்டை வாழ்த்திப் பேசி னர். பி.வி.ரமணன் நன்றி கூறி னார்.  முன்னதாக பெஃபி கொடியை  சம்மேளன உதவி தலைவர் ஆர்.துரைராஜூம், சம்மேளன கொடியை உதவி  தலைவர் பி.ஆர்.ஹரிஹரனும் ஏற்றினர். வரவேற்பு குழுத் தலைவர் ஒய்.சீதாராமன் வரவேற்றார். இந்த மாநாடு ஞாயிறன்று (அக்.9) மாலை நிறைவடைகிறது.

பிரதிநிதிகள் மாநாடு

பிரதிநிதிகள் மாநாட்டில் சம்மேளன பொதுச்செயலாளர் இ.சர்வேசன் செயற்குழு அறிக்கையையும், பொரு ளாளர் வி.ஹரிகிருஷ்ணன் நிதி நிலை அறிக்கையையும் சமர்ப்பித்தனர். தமிழகத்தில் உள்ள 32 மாநில தலைமை கூட்டுறவு வங்கிகள், 360 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளை ஒருங்கிணைத்து ‘தமிழ்நாடு வங்கி’யை உருவாக்க வேண் டும். மூன்றடுக்கு கூட்டுறவு அமைப்பை இரண்டடுக்காக மாற்ற வேண்டும். 120 நகர கூட்டுறவு வங்கி கள், 7 பணியாளர் கூட்டுறவு வங்கிகளை மாவட்ட அளவில்  ஒருங்கிணைத்து ஒரே வங்கி யாக மாற்ற வேண்டும் என்பன  உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப் பட்டன.