திருச்சிராப்பள்ளி,செப்.5- 8 மணிநேர வேலை, தண்டனை வழங்கும் முன் முறையான விசாரணை, ஊதிய விகித மாற்றம் மற்றும் பறிக்கப்பட்ட உரிமைகளுக் காக வரலாற்று சிறப்புமிக்க ரயில்வே தொழி லாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் 1946 இல் நடைபெற்றது. அப்போது போராட்டத்தை ஒடுக்க பிரிட்டிஷ் இந்தியாவின் ஹாரிசன் தலைமையிலான மல பார் போலீசார் சுட்டதில் தோழர்கள் தங்கவேலு, தியாகராஜன், ராஜூ, ராமச்சந்திரன், கிருஷ்ண மூர்த்தி ஆகிய 5 பேர் நெஞ்சில் குண்டு பாய்ந்து பொன்மலை சங்கத்திடலில் உயிர் நீத்தனர். இவர்கள் நினைவாக பொன்மலை தியாகி கள் 76ஆம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் மற்றும் சங்கத்திடல் நூற்றாண்டு கட்டடம் புதிய கட்டுமான துவக்க அடிக்கல் நாட்டு விழா தட்சிண ரயில்வே எம்ப்னாயீஸ் யூனியன் மத்திய சங்கம் சார்பில் திங்களன்று பொன்மலை சங்கத்திடலில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் டிஆர்இயு கௌரவத்தலைவர் டி.கே.ரங்கராஜன் பொன்மலை தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு மாலை அணிவித்து, மலர் தூவி செவ்வணக்கம் செலுத்தினார். பின்னர் பொன்மலை சங்கத்திடல் நூற்றாண்டு கட்டி டம் புதிய கட்டுமான துவக்க அடிக்கல்லை நாட்டி, கட்டட வரைப்படத்தை திறந்து வைத்தார். பின்னர் நடைபெற்ற பொன்மலை தியாகி கள் நினைவேந்தல் கூட்டத்திற்கு டிஆர்இயு தலைவர் ஜி.சுகுமாறன் தலைமை வகித்து பேசியதாவது: நாம் ஏற்கனவே பெற்றிருக்கின்ற சலுகை களை மீண்டும் பறிப்பதற்கான முயற்சியை கடந்த 8 ஆண்டுகாலமாக இப்போதைய ஆட்சி யாளர்கள் செய்து வருகின்றனர். இந்த காலக்கட் டம் 1976க்கு முன்னால் இருந்ததை விட மோச மாகி கொண்டே வருகிறது.
இதற்கு எதிரான வலுவான போராட்டங்களை தொழிலாளர்கள் நடத்த வேண்டி உள்ளது. தற்போது உள்ள ஆட்சியாளர்கள் மதத்தை ஆட்சியில் கலக் கும் வேலையைச் செய்கின்றனர். கார்ப்ப ரேட்டுகளோடு கைக்கோர்த்துள்ள ஆட்சியாள ராக உள்ளனர். ரயில்வேயில் எங்கு அதிக வசூல் நடக்கிறதோ அவற்றை திட்டமிட்டு தனியாருக்கு கொடுக்கின்றனர். 1976களில் தொழிலாளர் களின் உரிமைகளுக்கான போராட்டம் மட்டும் தான் நடைபெற்றது. ஆனால் இப்போது பறிக்கப் படுகின்ற உரிமைகளை பாதுகாப்பதற்கான போராட்டம், புதிய சலுகைகளை பெறுவதற்கான போராட்டம், தொழிற்சாலைகளை பாது காப்பதற்கான போராட்டம் என இந்த 3 வகை போராட்டங்களையும் ஒருங்கிணைத்து நடத்த வேண்டிய இடத்தில் நாம் உள்ளோம் என்றார். டிஆர்இயு துணை பொதுச்செயலாளர் பேபிஷகிலா பேசுகையில், வரலாற்றில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்றால் நாம் மீண்டும் அனைத்தையும் முதலிலிருந்து துவங்க வேண்டும். பொன்மலை தியாகிகள் செய்த தியாகத்தால் நமக்கு கிடைத்த எல்லா உரிமைகளை பாதுகாப்பதற்கான தியாகத்தை தான் நாம் இப்போது செய்ய வேண்டும். நாட்டு நலனுக்கும், தொழிலாளர்கள் நலனுக்கும் நாம் போராட வேண்டும். எனவே எதிர்காலத்தில் நாம் சமூகத்திற்காகவும், ரயில்வேக்காகவும் போரா டத் தயாராக இருக்க வேண்டும் என்றார்.
டிஆர்இயு பொதுச்செயலாளர் ஹரிலால் பேசுகையில், தொழிற்சங்க போராட்டத்தையும், சுதந்திர போராட்டத்தையும் இணைத்து நாம் செயல்பட்டுள்ளோம். நம்முடைய பல்வேறு உரிமைகள் பறிபோய் கொண்டிருக்கிறது. ரயில்வே நிர்வாகமும், ஒன்றிய அரசாங்கமும் தொழிலாளர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த தாக்குத லுக்கு எதிரான போராட்டம் தான் இந்த தியாகி களுக்கு நாம் செலுத்துகின்ற அஞ்சலியாக இருக்கும் என்றார். டிஆர்இயு செயல் தலைவர் ஜானகிராமன் பேசுகையில், எந்த உரிமையும், சலுகையும், முத லாளியோ, அரசாங்கமோ, நிர்வாகமோ தானாக முன்வந்து கொடுக்கவில்லை. நம்முடைய முன்னோர்கள், தியாகிகள் போராட்டத்தினா லும், செங்குருதியினாலும் கிடைக்கப்பெற்றது. அந்த சலுகைகளை தான் இந்த அரசு பறிக்கின் றது. 44 சட்டங்களை 4 தொகுப்பாக மாற்றுகின்ற னர். இதை எதிர்த்து தான் நாம் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். டிஆர்இயு வைக்கின்ற கோரிக்கை இந்தியா முழுவதும் எதிரொலிக்கும். டிஆர்இயுவின் 13 ஆண்டுகால தொடர் போராட்டத்தால் இந்தியா முழுவதும் 18ஆயிரம் ஆக்ட் அப்ரெண்டிஸ்களை நிரந்த ரப்படுத்தப்பட்டனர். ரயில்வேயில் உள்ள 57ஆயி ரம் புதிய பென்சன் ரயில்வே தொழிலாளர் களை ஒன்று திரட்டி புதிய பென்சன் திட்டத்திற்கு எதிரான பிரம்மாண்ட போராட்டம் தொடர்ச்சி யாக நடைபெறும். ரயில்வே தொழிலாளர்களின் கோரிக்கைகளை வென்றெடுப்போம் என்று இந்நாளில் சபதமேற்போம் என்றார்.
டிஆர்இயு கௌரவ தலைவர் டி.கே.ரங்க ராஜன் பேசுகையில், நாம் சுடப்பட்டு இறக்கப் போகிறோம் என தெரிந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்நீத்த பொன்மலை தியாகி களின் தியாகம் போற்றக்கூடியது. நமது நாட்டு வரலாற்றை மதம், இதிகாசங்கள், புராணங்கள், இலக்கியங்கள் அடைத்து கொண்டிருக்கின் றன. நமது பின் தலைமுறைகளுக்கு நாம் ஏதா வது செய்ய வேண்டும் என்றால் நமது வர லாற்றை அவர்களிடம் கூறவேண்டும். மதம் என்பது ஒரு தனிமனிதனின் உரிமை. அது ஒரு அரசின் உரிமை ஆகக்கூடாது. மதப் பிரச்சாரம் என்பது நமது வர்க்க ஒற்றுமையை பாதிக்கும். வர்க்க ஒற்றுமையை எதிர்த்து தான் இன்று ஜாதிய, மதப்பிரச்சாரத்தை பாஜக அரசு செய்து கொண்டிருக்கிறது. அரசுத்துறை தனி யார்மயமாவது தான் நவீன தாராளமயம். இது தான் ஒன்றிய அரசின் கொள்கை. இதை எதிர்த்துப் போராட வேண்டும் என்றால் வெள் ளைக்காரர்களை எப்படி எதிர்த்து போராடி னோமோ, அதேபோன்ற போராட்டத்தை நடத்தி னால் தான் எதிர்காலத்தில் ஒரு சுமூகமான உல கத்தை உருவாக்க முடியும் என்றார். சிபிஎம் மத்தியக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பி னர் ஸ்ரீதர், சிஐடியு திருச்சி மாநகர் மாவட்டச் செய லாளர் ரெங்கராஜன், பெல் சிஐடியு சங்க பொதுச் செயலாளர் பிரபு ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் டிஆர்இயு இளங்கோவன், டிஆர்இயு, சிஐடியு, பெல் சிஐடியு சங்கத்தினர், சிபிஎம் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, புற நகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் தோழமை சங்கத்தினர் கலந்து கொண்டு பொன்மலை தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு மாலை அணிவித்து, மலர் தூவி செவ்வணக்கம் செலுத்தினர். முன்னதாக டிஇர்இயு துணை பொதுச்செய லாளர் மாதவன் வரவேற்றார். முடிவில் பொன் மலை பணிமனை கோட்டத்தலைவர் மகேந்தி ரன் நன்றி கூறினார்.