tamilnadu

img

வெம்பக்கோட்டை அகழாய்வில் செப்புக் காசு, சங்கு வளையல்கள் கண்டுபிடிப்பு

வெம்பக்கோட்டை, செப்.23- வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழ்வா ராய்ச்சியில் சுடும் மண்ணால் ஆன முத்திரை, சங்கு வளையல்கள் மற்றும் செப்புக்காசு ஆகியவை  கண்டெடுக்கப்பட்டன.     விருதுநகர் மாவட்டம்,   வெம்பக் கோட்டையில் உள்ள வைப்பாற்று கரையில் வடகரையில் அமைந் துள்ள உச்சிமேட்டில் 25 ஏக்கர் பரப்பளவிலான தொல்லியல் மேட்டில் கடந்த மார்ச் 16 ஆம் தேதி முதல் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த அக ழாய்வில் முன்னதாக சுடு மண்ணால் ஆன  பகடைக்காய், தக்களி, ஆட்டக்காய்கள், முத்து மணிகள்,சங்கு வளையல் கள், பெண் உருவம்,காளை உருவம்,கோடாரி,சுடு மண்ணால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருட்கள், தங்க அணிகலன் கள், பொம்மை  உருவம் கண்டெ டுக்கப்பட்டுள்ளது.  இதுவரை இந்த பகுதியில் சுமார் 15 குழிகள் தோண்டப்பட்டுள்ள நிலையில் வியாழக்கிழமை சுடுமண்ணால் ஆன முத்திரை, சங்கு வளையல் கள், ஆண்,பெண் உருவம் பொறித்த செப்புக் காசு ஆகிய வைகள் கண்டெடுக்கப்பட்டன.  இதன் மூலம் இந்த பகுதியில் வாழ்ந்தவர்கள் பல்வேறு பகுதி களில் வாணிப தொடர்பு வைத்துள் ளதும், சங்குகளால் ஆன அழகு பொருட்களை பயன்படுத்தியதும் தெரிய வந்துள்ளது. மேலும் இம்மாத இறுதி வரை இந்த அக ழாய்வு பணிகள் நடைபெறும் என  தொல்லியல்துறையினர் தெரி வித்துள்ளனர்.