tamilnadu

img

வங்கி ஊழியர்கள் 4000 கி.மீ. பிரச்சாரம் தொடங்கியது

சென்னை, ஜூலை 19 - பொதுத்துறை வங்கிகளை பாதுகாக்கவும், தனியார் வங்கிகளை  தேசியமயமாக்கவும் கோரி புதனன்று (ஜூலை 19) வங்கி ஊழியர்கள் பிரச்சாரம்  தொடங்கியது. பொதுத்துறை, கூட்டுறவு, கிராம  வங்கிகளை பாதுகாக்க வேண்டும், கூட்டுறவு வங்கிகள் மாநில அரசின்  கட்டுப்பாட்டில் இருந்து மாற்றக் கூடாது என்பது உள்ளிட்ட அம்சங் களை வலியுறுத்தி இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் (ஃபெபி) 4 ஆயிரம் கி.மீ. வேன் பிரச்சாரம் நடக்கி றது. 4 மையங்களில் தொடங்கிய இந்த பிரச்சாரம் 22 அன்று திருச்சி யில் நிறைவடைகிறது. சென்னையில் இருந்து மாநிலச் செயலாளர் எஸ்.பிரேமலதா தலை மையிலான குழுவின் பிரச்சார  தொடக்க நிகழ்வில் செய்தியாளர்க ளிடம் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டி.ரவிக்குமார் கூறியதா வது: தனியார் வங்கிகள் தேசியமய மாக்கப்பட்ட 55வது ஆண்டு நாளில் (1969 ஜூலை 19) பொதுத்துறை வங்கிகளை பலப்படுத்தி பாதுகாக்க வேண்டும். வாடிக்கையாளர் சேவை களை மேம்படுத்த வேண்டும் என  வலியுறுத்தி பிரச்சாரத்தை தொடங்கி யுள்ளோம். வங்கிகள் தேசியமய மாக்கப்பட்ட பிறகு, 8 ஆயிரம் கிளை களை கொண்டிருந்த வங்கித்துறை தற்போது ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டதாக மாறியுள்ளது. மாநில அரசின் கீழ் உள்ள கூட்டுறவு வங்கிகளும், கிராம வங்கிகள் அபரிமிதமான வளர்ச்சி அடைந்துள்ளன.

இத்தகைய பொதுத்துறை, கூட்டுறவு, கிராம வங்கிகளை சிதைக்க  ஒன்றிய அரசு முயற்சித்து வருகி றது. 2021 பட்ஜெட்டில் 2 பொதுத்துறை  வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என்று அறிவித்தது. அரசு ஆலோச கர்கள் அனைத்து பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க பரிந் துரைத்து வருகிறார்கள். வங்கி  ஊழியர்கள் ஒன்றுபட்ட போராட்டத் தால் தனியார்மய நடவடிக்கைகள் காலதாமதமாகி வருகின்றன. இத்தகைய சூழலில், பொதுத் துறை பாதுகாக்க வேண்டும், தனியார் வங்கிகளை அரசுடமையாக்க வேண்டும், வாடிக்கையாளர் சேவை களை மேம்படுத்துவதில், வரை முறையற்ற சேவை கட்டணங்களை நீக்க வேண்டும், கூட்டுறவு வங்கி கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்து ஒன்றிய அரசின் கட்டுப் பாட்டிற்கு மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும், கிராம வங்கி களின் பங்குகளை தனியாருக்கு விற் கும் திட்டத்தை கைவிட வேண்டும் என  வலியுறுத்தி இந்த பிரச்சாரம் நடை பெற்றது.

திருச்சியில் நிறைவு

சென்னையில் மாநிலச் செயலா ளர் எஸ்.பிரேமலதா, கோவையி லிருந்து எஸ்.சிவலிங்கம், ஓசூரிலி ருந்து எஸ்.அரிராவ், தூத்துக்குடியி லிருந்து ஆண்டோ ஹில்பர்ட் ஆகி யோர் தலைமையில் பிரச்சாரம் நடை பெறுகிறது. இந்தக் குழுக்கள் 4 ஆயி ரம் கிலோ மீட்டர் கடந்து ஜூலை 22 அன்று திருச்சியில் சங்கமிக்கின்றன. இதனையொட்டி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சிஐடியு மாநிலத்  தலைவர் அ.சவுந்தரராசன், ஃபெபி  அகில இந்திய தலைவர் சி.ெஜ.நந்த குமார் உள்ளிட்டோர் பேசுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். இந்த பிரச்சாரத்தை தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத் தின் பொதுச் செயலாளர் டி.செந்தில் குமார், தமிழ்நாடு அரசு போக்கு வரத்து ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் கே.ஆறுமுக நயினார்  ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வின் போது ஃபெபி தலைவர் எஸ்.சுனில் குமார்,  நிர்வாகிகள் தி.தமிழரசு, ராஜகோபால், இ.சர்வே சன் உள்ளிட்டு தோழமை சங்கத் தலைவர்கள் உடனிருந்தனர்.

5 லட்சம் காலிப் பணியிடங்கள்

ஃபெபி அகில இந்திய இணைச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன் கூறுகையில், “தனியார் வங்கிகளில் உயர்மட்ட ஊழல் நடைபெறுகிறது. வங்கிகள் தேசியமயமாக்கல் முன்பு 558 திவாலாகின. அதற்கு பிறகு 38 தனியார் வங்கிகள் திவாலாகின. எனவே, வங்கிகள் தனியார் மயமானால், மக்களின் சேமிப்பு உள்ள ரூ.187 லட்சம் கோடி பாதுகாப்பு இருக்காது. அகில இந்திய அளவில் ஒரு கூட்டுறவு வங்கியை தொடர்ந்து, இதில் அனைத்து கூட்டுறவு வங்கிகள்  இணையலாம் என்கிறார்கள். இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. கிராம வங்கிகளின் 49 விழுக்காடு பங்குகளை தனியாருக்கு கொடுக்க சட்டம்  இயற்றியுள்ளது. இவற்றை கைவிட வேண்டும்” என்றார். “வங்கியில் கடன் வாங்கிவிட்டு, வசதி இருந்தும்  கடனை திருப்பி செலுத்தாதவர்கள், மோசடி செய்தவர்க ளிடம் வங்கிகள் சமரசம் பேசி, கொடுப்பதை வாங்கிக் கொண்டு, கடன் ரத்து செய்யுங்கள் என்று ரிசர்வ் வங்கி  வழிகாட்டி உள்ளது. கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக மக்களின் பணத்தை சூறையாடுகிறது. வங்கிகள் அபரிமிதமான லாபம் ஈட்டி வரும் நிலையில், அபராதக் கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும். வங்கித் துறையில் 5 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால் வங்கிச்சேவை மோசமாக உள்ளது. இந்த இடங்களை நிரப்பாமல், பொதுத்துறைகளை அரசு முடக்க முயற்சிக்கிறது. இதனை கண்டித்தும் பிரச்சாரம் நடைபெறுகிறது. மக்கள் பணம் மக்களுக்கே பயன்பட வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

 

;