tamilnadu

img

எழுத்தாளர் செ.கணேசலிங்கன் மறைவு: தமுஎகச இரங்கல்

சென்னை,டிச.4- ஈழத்தின் முற்போக்கு எழுத்தாளர் செ.கணேசலிங்கன் மறைவுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.  சங்கத்தின் மாநிலத் தலைவர் (பொறுப்பு) மதுக்கூர் இராமலிங்கம், பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் விடுத்துள்ள இரங்கல் செய்தி யில் கூறியுள்ளதாவது: யாழ்ப்பாணம் அருகே உரும்பி ராய் கிராமத்தில் 1928ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி பிறந்தவர் தோழர் செ.கணேசலிங்கன். இலங்கை அரசின் பாதுகாப்புத் துறையில் எழுத்தராகப் பணியாற்றியவர். இலங்கையில் இருந்து வெளி யாகிக் கொண்டிருக்கும் ‘தினகரன்’ நாளிதழில் ‘மன்னிப்பு’ என்னும் கதையை முதன் முதலில் எழுதிய தினூடாக எழுத்துலகில் நுழைந்து ‘நீண்டபயணம், சடங்கு, செவ்வானம் போன்ற நாவல்கள் வழியாக கவ னத்தைப் பெற்றவர்.  

சாதியால் ஒடுக்கப்பட்டும் வர்க்கத் ்தால் சுரண்டப்படும், எளிய மக்கள்தான் அவருடைய படைப்புகளின் மாந்தர் ்கள். சாதிய – வர்க்கப் போராட்டத்தை மையப்படுத்திய ஒரு நாவல்தான் நீண்டபயணம். ‘குந்தவிக்கு கடிதங்கள்’ ‘குமரனுக்கு கடிதங்கள்’ ‘மான்விழிக்கு கடிதங்கள்’மார்க்சியத்தை எளிய வகையில் விளங்கிக் கொள்ள அவர் எழுதிய நூல்கள். படைப்புகளில் பூடகமாகவும், பட்ட வர்த்தனமாகவும் வர்க்க அரசியலை முன்னிறுத்தியவர். மட்டுமின்றி யாழ் பாண மேலாதிக்கத்தால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கோவில் கதவுகள் பூட்டப்பட்ட போது, அதற்கெதிராக குரல் எழுப்பியவர், போராடியவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1949ஆம் ஆண்டு இந்திய அரசால் தடை செய்யப்பட்டது. அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களில் முக்கியமாணவராக விளங்கிய ப.ஜீவானந்தம் தோணி மூலம் கோடி யக்கரை வழியாக யாழ்ப்பாணத்திற்குச் சென்றார். செ.கணேசலிங்கனும், குலவீர சிங்கமும் ப. ஜீவானந்தத்தை அழைத்துக் கொண்டு உரும்பிராய் கிராமத்திற்குச் சென்றனர். அக்கிராமத்தில் தீண்டாமை ஒழிப்பு குறித்து தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும்  பகுதியில் கூட்டம் நடத்தினர். அக்கூட் ்டத்தில் ப.ஜீவானந்தம் உரை யாற்றினார்.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின்  தலைவர்களில் ஒருவரான கார்த்தி கேயனின் தொடர்பு செ.கணே சலிங்கனை மார்க்சிஸ்ட் சிந்தனை யுடையவராக்கியது. கொழும்பில் 1956 ஆம் ஆண்டு உலக சமாதான மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டிற்கு உலகப் புகழ்பெற்ற  கவிஞர் பாப்லே நெருடா வருகை தந்திருந்தார். அவரை இலங்கை முற்போக்கு எழுத்தா ளர் சங்கம் கொழும்பில் சொற்பொழிவு ஆற்றிட ஏற்பாடு செய்தததோடு  அக்கூட்டத்திற்கு செ.கணேசலிங்கன்  தலைமை தாங்கினார் என்பது வர லாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ் ்வாகும். ‘சாயம்’ என்ற சிறுகதை தேயிலைத் தோட்டத்தொழிலாளர்களின் துயரத்தைச் சொல்லும் கதை. அச்சிறு கதை ரஷ்ய மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

“கொடுமைகள் தாமே அழிவ தில்லை” என்னும் அவருடைய சிறு கதை தொகுப்பு ஆங்கிலம், ரஷ்ய, சிங்களம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளிவந்துள்ளது. நாற்பதுக்கும் மேற்பட்ட நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என முப்பதுக்கும் மேல் எழுதியுள்ள புத்தகங்கள் எழுதியுள்ளார்.  தி ஹிந்து (ஆங்கிலம்) ஃப்ரண்ட்லைன் இதழ்களில் ஆங்கில நூல்களுக்கான மதிப்புரைகளை எழுதிக் கொண்டிருந்தார். இலங்கை -இந்தியாவில் குமரன் புத்தக இல்லம் என்ற பதிப்பகத்தை தொடங்கி இலங்கை பற்றிய பல முக்கி யமான ஆய்வு நூல்களை வெளியிட்ட வர். தோழர் செ.கணேசலிங்கன் அவர்க ளுக்கு தமுஎகச மாநிலக்குழு அஞ்சலி செலுத்துகிறது.

;