tamilnadu

img

வடமதுரையை தனித் தாலுகாவாக அறிவிக்கக் கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், அக்.21- திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா வட மதுரை யூனியனுக்கு உட் பட்ட கிராம பஞ்சாயத்து மக்க ளின் கோரிக்கைகளாக சாலை வசதி, குடிநீர் வசதி,  சாக்கடை வசதி செய்து தர வேண்டும்  வடமதுரை ஒன்றி யத்தை தனி தாலுகாவாக தரம் உயர்த்தக் கோரியும் வடமதுரை தென்னம்பட்டி நான்கு வழிச்சாலையில் மேம்பாலம்  அமைத்து தரக்  கோரியும் வலியுறுத்தி வட மதுரை ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக   ஆர்ப்பாட்டம் வடமதுரை யில் நடைபெற்றது  பின்னர் யூனியன் அலு வலகத்தில் பொதுமக்களின் மனுக்களை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வழங்கப்பட்  டது. இந்த ஆர்ப்பாட்டத் திற்கு ஒன்றிய செயலாளர் எம்.மலைச்சாமி தலைமை வகித்தார் மாவட்டக் குழு உறுப்பினர் சி.குணசேகரன், எம்.கே.சம்சுதீன், பி.தங்க ராசு உள்ளிட்ட பல கலந்து கொண்டனர்.