tamilnadu

தமிழகம் வந்த 18 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை,டிச.11 வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகளில் 18 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்படுகிறது. 14 பேர் அரசு  மருத்துவமனையிலும் 4 பேர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெறு கிறார்கள். வெளிநாடுகளில் பரவி வரும்  உருமாறிய ஒமைக்ரான் கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப் ்பட்டுள்ளது. சென்னை விமான நிலை யத்திற்கு வரக்கூடிய பயணிகள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத் ்தப்படுகிறார்கள். இதுவரையில் 18 பேருக்கு கொரோனா இருப்பத உறுதி செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூர், சுவீடன், இங்கிலாந்து உள்ளிட்ட இடர்பாடு அதிகம் உள்ள நாடு களில் இருந்து வந்த 9,819 பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 11 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல இடர்பாடு இல்லாத நாடுகளில் இருந்து வந்த 43 ஆயிரத்து 938  பயணிகளில் 2 சதவீத உத்தேச கொரோனா பரிசோதனை 1,303 பேருக்கு செய்ததில் அமெரிக்காவில் இருந்து  வந்த 2 பேருக்கும், அபுதாபி, நைஜீரியா, இலங்கையில் இருந்து வந்த தலா ஒரு பயணிக்கும் தொற்று உறுதி செய்யப் ்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

;