குடவாசல், டிச.12- கொரடாச்சேரி ஒன்றியம் காவாலக்குடி கிராமத்தில் உள்ள திருப்பனிப்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதும் பெரும் தோழர் எம்.சண்முகம் படத்திறப்பு விழா ஞாயிறன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிபிஎம் கொரடாச்சேரி ஒன்றிய செயலாளர் டி.ஜெயபால் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி தோழர் எஸ்.எம். நினைவு கல் வெட்டை திறந்து வைத்தார். தஞ்சை மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஆர்.சி.பழனிவேல் நினைவு கொடி ஏற்றி வைத்து தோழர் எம்.சண்முகம் படத்தை திறந்து வைத்தார். விவசாய தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம், மாவட்டச் செயலாளர் ஆர்.குமாரராஜா, மூத்த தோழர்கள் கே.ரங்கசாமி, எஸ்.சேகர், டி.அய்யாறு ஆகியோர் புகழஞ்சலி செலுத்தினர். மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் எம்.சேகர், பி.கந்தசாமி, ஜி.பழனி வேல், எம்.கலைமணி, மாவட்ட குழு உறுப் பினர்கள் எஸ்.தம்புசாமி, கே.சீனிவாசன், எப்.கெரக்கொரியா, ஒன்றியக் குழு உறுப்பி னர்கள் எஸ்.எம்.ஜெய்கிஷ், கே.காமராஜ், கிளை செயலாளர்கள், தோழர்கள், பொது மக்கள் கலந்துகொண்டனர்.