சென்னை,செப்.7- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தென்காசி மாவட்டச் செயலாளர் தோழர்.எம்.கண்ணன் அவர்கள் செப்டம்பர் 7 புதனன்று இயற்கை எய்திவிட்டார் என் பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவருடைய திடீர் மறைவு பேரதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது. கடந்த ஜுலை மாதம் நடைபெற்ற தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்ட மாநாட்டில் அவர் மாவட்டச் செயலாளராக தேர்ந்தெடுக்கப் பட்டார். 46 வயது தான், துடிப்பு மிக்க செயல்வீரர். விவசாயிகளின் நிலஉரிமை யை பாதுகாக்கும் போராட்டத் தில் முனைப்புடன் செயல்பட்ட வர். விவசாயிகளின் தில்லி போராட்டத்தில் நேரடியாக பங்கேற்றவர். அவருடைய மறைவு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் திற்கு பேரிழப்பாகும். அவரு டைய மறைவுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு சார்பில் செவ்வணக்கம்செலுத்துகிறோம். அவரை இழந்து தவிக்கும் அவருடைய துணைவியார் திருமதி லட்சுமி மற்றும் குழந்தைகள் தமிழ் பிரபா, முகி பாரதி ஆகியோருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.