tamilnadu

img

தகவல் தொழில் நுட்பப்பூங்காவை முழுமையாக செயல்படுத்த அரசு ஓய்வூதியர்கள் வலியுறுத்தல்...

மதுரை;
தமிழ்நாடு அரசு அனைத் துத்துறை ஓய்வூதியர் சங் கத்தின் மதுரை மாவட்ட ஐந்தாவது பேரவை மதுரையில்சனிக்கிழமை மாவட்டத் தலைவர் குரு. தமிழரசு தலைமையில் நடைபெற்றது. மகளிர் துணைக்குழுத் தலைவர் இ.பானு வரவேற்றார், மாநிலத் துணைத் தலைவர் மு.சுப்ரமணியன் துவக்கிவைத் தார். மாவட்டச் செயலாளர் ஏ.பாலசுப்ரமணியன் பொருளாளர் நா.ஜெயராமன் ஆகியோர் அறிக்கை சமர்ப்பித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர்ஜெ.மூர்த்தி வாழ்த்திப் பேசினார். மாநிலப் பொருளாளர் என்.ஜெயச்சந்திரன் நிறைவுரையாற்றினார். மாவட்ட இணைச் செயலாளர் கே.நாராயணன் நன்றி கூறினார்.

இந்தபேரவையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அருகில் செயல்பட்டு வரும் தகவல் தொழில்நுட்பப் பூங்காவை முழுமையாக செயல்படுத்த குழு ஒன்றை அரசு அமைக்க வேண்டும். அதில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். தொழிலாளர் விரோதச் சட்டங்களை, விவசாய விரோத வேளாண்சட்டங்களை மத்திய அரசுதிரும்பப் பெற வேண்டும்.மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை தாமதமின்றி நிறைவேற்றி செயல் படுத்த வேண்டும். ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். தமிழ்நாடுஅரசுப் பணி ஓய் வூதியர் களுக்கு IFHRMS என்கிற தனியார் நிறுவனம் வழியாக ஓய்வூதியம் வழங்கும் முறையை ரத்து செய்து இசிஎஸ் மூலம் வழங்க வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வை வழங்கஎன்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. பேரவையில் செம்மலருக்கான சந்தாக்களை செம்மலர் துணையாசிரியர் எஸ்.பி.ராஜேந்திரனிடம் அனைத்துத்துறை ஓய்தியர் சங்க மாவட்டத் தலைவர் குரு.தமிழரசு வழங்கினார்.

;