tamilnadu

img

தமிழ்ப் பல்கலை.யில் சிலம்பாட்டம் தொடர்பான பட்டயக்கல்வி தொடக்கம்

தஞ்சாவூர், செப்.17 - தமிழ்நாடு அரசு தமிழர் களின் மரபுக் கலையான சிலம்பாட்டத்தை மீட்டுரு வாக்கம் செய்யும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதற்கு, பலம் சேர்க்கும் வகையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் சிலம்பாட்டத்தில் பட்டய வகுப்புகளை அறிமுகம் செய்துள்ளது.  அதற்காக, கடந்த 3  மாதங்களுக்கு முன்பு பல்க லைக்கழக இணையதளத் தில் பொது அறிவிப்பு வழங்கப் பட்டு விண்ணப்பங்கள் பெறப் பட்டன. சென்னை முதல் கன்னியாகுமரி வரை தமிழ் நாட்டின் அனைத்து மாவட்டங் களில் இருந்தும் விண்ணப்பங் கள் வந்து சேர்ந்தன.  இதையொட்டி முதல் சுற்றுக் கலந்தாய்வு மற்றும்  மாணவர் சேர்க்கை வெள்ளி யன்று  பல்கலைக்கழக மொழிப்புல அவையத்தில் நடைபெற்றது. கலந்தாய் வுக்கு அழைக்கப்பட்ட மாண வர்கள் தமிழ்நாடு அரசின் விதிகளுக்குட்பட்டு இன வாரி சுழற்சி முறையில் தேர்ந் தெடுக்கப்பட்டு சேர்க்கை வழங்கப்பட்டது.

 இதில், தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் வி.திருவள்ளுவன் பேசுகை யில், “தமிழ் பல்கலைக்கழகத் தில் இந்த ஆண்டு பல்வேறு பட்டயப் படிப்புகள் புதிதாக  அறிமுகப்படுத்தப்பட்டுள் ளன. அவற்றில் குறிப்பாக சிலம்பாட்டத்திற்கான பட்ட யப் படிப்பிற்கு மட்டுமே 200  இடங்கள் சேர்க்கைக்கு அனு மதிக்கப்பட்டது. இங்கு  சேர்க்கை பெற புதுக் கோட்டை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென்  மாவட்டங்கள் மட்டுமல்லாது சென்னை, திருவள்ளூர், வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் இருந்தும் பலர் வருகை தந்திருப்பது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.  இதில் பல்வேறு ஆண்டு களாக சிலம்பத்தைப் பயிற்று வித்து வரும் சிலம்ப ஆசான் களும் வந்துள்ளனர். அடுத்த  ஆண்டு முதல் சிலம்பாட்டத் தில் இளநிலை பட்டயம் மட்டுமல்லாது முதுநிலை பட்டயப் படிப்பும், சிலம்பாட் டத்திற்கான முழுநேரப் பட்ட யப் படிப்புகளும் கொண்டு வரப்படும்” என்றார். பின்னர்  சேர்க்கை பெற்றவர்களுக் கான உறுதிப் படிவத்தை துணைவேந்தர் வழங்கி னார்.

;